Wednesday, June 19, 2019

தோழர் நாபாவின் 30வது நினைவு தினம்!

பாசிச புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட eprlf செயளாலர் நாயகம் தோழர் பத்பநாபா அவர்களுக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட தினமாகிய இன்று ஆனி 19  பொது மக்களாலும் நினைவு கூறப்பட்டது.தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஏகப்பிரதிநிதித்துவ மோகத்தால் நிலைகுலைந்தது என்பது யாவரும் அறிந்தது. புலிகள் தமது பாசிசக் கொள்கைகளின் நிமித்தம் ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்களை காவு கொண்டனர் என்பது வரலாற்றுப் பதிவு. இப்பதிவுகளின் வரிசையில் இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மண்ணில் புலிகளினால் கோழைத்தனமாக கொல்லப்பட்ட  Eprlf தலைவர் பத்மநாபா  நினைவு கூருகின்றனர். 
புலிகளின் கோர வெறியாட்டத்தை நினைவு கூருகின்ற அதே சமயத்தில் அமரர் பத்மநாபாவினால் வழிநடத்ததப்பட்ட அரசியல் வியாபாரிகள் சிலர் இன்றும் புலிகளை தம் ஏகப்பிரதிநிகளாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தெரிவிக்கின்றனர்.மேலும் அண்மைக்காலம் வரை புலிகளை ஏகப்பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்டிருந்த தமிழ் தேசியக்
கூட்டமைப்பை தாறுமாக விமர்சித்து வந்த  பலரும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெளி நாடுகளில் வாழும் புலி ஆதருவு பச்சோந்திகள் சில தமது சுயநலத்துக்காக  தமது தேவைகளுக்காக புலிகளுக்கு எதிரனவர்களை வைத்து பயன் பட்டுள்ளனர், இவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக புலிகளுக்கு எதிரனவர்கள் தற்போது   தெளிவாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிட தக்கது.

No comments:

Post a Comment