இந்திய வரலாற்றிலேயே 1988-ம் ஆண்டுதான் அதிக வெப்பநிலை இருந்ததாகப் பதிவுகள் கூறுகின்றன. அதாவது சுமார் 33 நாள்கள் வரை தொடர்ந்து அதிக வெப்பநிலை நிலவியுள்ளது. தற்போது அந்த அளவுக்கு இணையாக மீண்டும் இந்தியாவில் வெப்பநிலை உயர்ந்து காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடர்ந்தால் முன்னதாக இருந்த பதிவை 2019-ம் ஆண்டு முறியடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. டெல்லி, பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகப் பீகாரின் பாட்னா,
உத்தரபிரதேசத்தின் வாரணாசி போன்ற இடங்களில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தக் கோடைக்காலம் பல மாநிலங்களில் சோக வரலாறு படைத்துள்ளது. கடந்த பத்து வருடங்களில் இல்லாத வெப்பநிலை ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் நிலவி வருகிறது.
உத்தரபிரதேசத்தின் வாரணாசி போன்ற இடங்களில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தக் கோடைக்காலம் பல மாநிலங்களில் சோக வரலாறு படைத்துள்ளது. கடந்த பத்து வருடங்களில் இல்லாத வெப்பநிலை ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் நிலவி வருகிறது.
பீகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சல் காரணமாக இதுவரை 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமல்லாது கடந்த 30 மணி நேரத்தில் அதிக வெப்பம் தாங்காமல் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 16 முதல் 18 வயது உள்ளவர்களே அதிகம். அவுரங்கபாத்தில் 34 பேரும், கயாவில் 25 பேரும், நவாடாவில் 12 பேரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இறப்புகள் தொடர்பாக அரசிடமிருந்து எந்த முறையான அறிவிப்பும் இதுவரை வரவில்லை. மூளைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூபாய் 4 லட்சம் வழங்கப்படும் எனப் பீகார் மாநில முதல்வர் நித்தீஷ் குமார் அறிவித்துள்ளார்.
தர்பூசணி, மாம்பழம், எலுமிச்சை, உப்பு - சர்க்கரை கரைசல் போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும். சிட்ரஸ் ஆசிட் நிறைந்த பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மக்கள், உணவிலும் கட்டுபாட்டுடன் இருத்தல் நல்லது. இறைச்சி, உலர்ந்த பழங்கள், காஃபி, டீ, மது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்பாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் தங்கள் வீட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகளையும் வெயிலில் வைக்காமல் அவற்றையும் பாதுகாக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment