பொசொன் போயா தினத்தின் ஆசீர்வாதத்தினால் உங்களது வாழ்க்கை ஒளிமயமாகி அனைத்து இலங்கையர்களினதும் உள்ளங்களிலும் கருணையும் இரக்கமும் வளர வேண்டுமென பிரார்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை வரலாற்றினதும் இலங்கை மக்களினதும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை ஒன்றாக பொசொன் போயா தினத்தைக் குறிப்பிட
முடியும். தேவநம்பியதிஸ்ஸ மன்னனின் காலத்தில் மஹிந்த தேரர் உத்தம பரிசுத்த பௌத்த தர்மத்தை கொண்டு வந்தது இத்தினத்திலாகும்.
மஹிந்த தேரர் இந்நாட்டிற்கு வருகைத் தந்ததன் பின்னர் இலங்கை மக்கள் சமூகத்திற்கு கொடையாக வழங்கப்பட்ட பௌத்த தர்மமானது முழு மக்கள் சமூகத்தினதும் மனப்பான்மை மற்றும் வாழ்க்கை முறை என்பவற்றிலே மாற்றத்தினை ஏற்படுத்தியது. அதனை ஒரு மதமாக மாத்திரமன்றி தமது வாழ்க்கையினை தர்மத்தின் பால் செலவிடுவதற்குமான வாழ்க்கை முறையொன்றாக அதனை மிகவும் பக்தியுடன் அரவணைத்துக் கொண்டனர். வரலாறு முழுவதும் இலங்கையின் கலாசாரம், ஆன்மீக நற்குணங்கள்
மாத்திரமன்றி அரசியலும் கூட பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு வளாச்சியடைந்தது.
மாத்திரமன்றி அரசியலும் கூட பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு வளாச்சியடைந்தது.
தற்போதைய சமூக நிலையிலே பௌத்த தர்மத்தின் அடிப்படைப் போதனையாக அமைந்துள்ள கருணை, இரக்கம், பொறுமை போன்ற உயர் நற்பண்புகளை முன்பொருபோதும் இல்லாத அளவிற்கு தமது வாழ்வில் கடைபிடிப்பதற்கு பழக்கவும் பயிற்சியளிக்கவும் வேண்டும். நான் அனைத்து இலங்கையர்களிடமும் வேண்டிக் கொள்வது எமது கலாசாரத்தை வளர்த்த பௌத்த தர்மத்தைப் பற்றி அழமாக ஆய்வு செய்து அதன் பிரகாரம் தமது வாழ்க்கையினை அமைத்துக் கொண்டு சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்கு முன்வாருங்கள் என்பதாகும்.
இப்பொசொன் போயா தினத்தின் ஆசீர்வாதத்தினால் உங்களது வாழ்க்கை ஒளிமயமாகி அனைத்து இலங்கையர்களினதும் உள்ளங்களிலும் கருணையும் இரக்கமும் வளர வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன். உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசி கிட்டட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment