Monday, June 17, 2019

இலங்கை, இந்தியப் படையினர் குடும்பத்துடன் பரஸ்பர விஜயம்!

இலங்கை, இந்தியப் படைகளைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன், இரு நாடுகளுக்கும் பரஸ்பர விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.  படையினரிடையே நல்லிணக்கம், ஒருமைப்பாட்டை மேற்கொள்ளும் நோக்கிலும், ஒரு சிறந்த ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் வகையிலுமே, இவ்விஜயங்கள் ஏற்பாடு செய்யப்ப
ட்டுள்ளனவென, பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியப் படைகளின் 159 வெளிநாட்டு பிரதிதிநிதிகள் தமது மனைவி, குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்களாக இலங்கைக்கான விஜயத்தை ஜூன் 15ஆம் திகதி
மேற்கொண்டதுடன் இலங்கை முப்படைகளின் 162 பிரதானிகள் தமது குடும்ப அங்கத்தவர்களுடன் இந்தியாவுக்கான பௌத்த மத வழிபாட்டு ஸ்தலங்களை வழிபடும் நோக்கில், பயணத்தை ​ மேற்கொண்டுள்ளனர்.
 
கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு, சனிக்கிழமை(15) வருகை தந்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரான தரன்ஜித் சிங் சன்து, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, இந்திய படையினரை வரவேற்றனர். அத்துடன், இலங்கைப் படையினரையும் வழியனுப்பிவைத்தனர்.  
 
இதன்போது இந்திய இராணுவத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் 95 பேர், கடற் படையினர், விமானப் படையினர் தலா 32 பேர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்கள், ஜூன் 18 ஆம் திகதி வரையிலும், இலங்கையில் தங்கிருந்து, மத்திய, மேற்கு பிரதேசங்களுக்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.  
 
இதன் போது பாரிய அளவிலான இந்திய முப்படையின் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார் இயற்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.  
இந்திய பிரதமர் நரேந்திர மோடியவர்களின் வருகையை தொடர்ந்து இவர்கள், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.  
 
அதற்கமைய இலங்கையின் முப்படையினர் பொசொன் போயா தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள புத்தகயாவை வழிபடும் நோக்கில் தமது பயணத்தை சனிக்கிழமையன்று (15) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பணித்தனர்.  
 
இலங்கை மற்றும் இந்திய படைகளுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேற்கொள்ளும் நோக்கில் இந்திய விமானப் படையால் இப் பயணத்துக்கான விசேட விமானம் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.  
கடந்த வருடத்தில் குறைந்த அளவிலான இலங்கை படையினர் இந்தியப் படையினரின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டதுடன் இம்முறை இலங்கை படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட பயணத்தின்போது இந்திய படையினருக்கான அழைப்பையும் விடுத்துள்ளனர்.  
 
கொழும்பு விமான நிலையத்தில் இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் இராணுவத் தளபதியவர்களிடையே நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை முப்படையினரிடையே மேற்கொள்ளும் நோக்கில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment