அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டிக்கு இடம் இருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு
பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் சரியான தருணத்தில் இது குறித்த தனது முடிவினை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து எவ்வித நிலைப்பாட்டினையும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்த மைத்திரி, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு
தெரிவிப்பேன் என கூறிவந்தார்.
தெரிவிப்பேன் என கூறிவந்தார்.
இந்நிலையில் அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு குறித்தே அவரது இந்த கருத்து வெளிப்படுத்துகின்றது.இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனாவிற்கும் இடையிலும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment