Wednesday, June 26, 2019

உலகின் சக்தி வாய்ந்த தலைவராக' பிரதமர் மோடி தான் "டாப்'

உலகின் சக்தி வாய்ந்த தலைவராக' பிரதமர் மோடி தேர்வானார். பிரிட்டனை சேர்ந்த "பிரிட்டிஷ் ஹெரால்ட்' பத்திரிகை, "2019ல் உலகின் சக்தி வாய்ந்த தலைவர் யார்' என்ற ஆன்லைன் கருத்துக் கணிப்பை நடத்தியது. போட்டியில் 25 உலகத் தலைவர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் வாக்களித்தனர். இதில், 31 சதவீத ஓட்டுகளுடன் பிரதமர் மோடி முதலிடம் பெற்றார். அடுத்த மூன்று இடங்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப, சீன அதிபர் ஜி ஜின்பிங் பெற்றனர். பருவநிலை மாற்றத்துக்கு உரிய நடவடிக்கை, பாக்., பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை, மருத்துவ காப்பீட்டு திட்டம், ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கியது போன்றவை மோடியின்
வெற்றிக்கு காரணமாக அமைந்தன. இதனை கவுரவிக்கும் வகையில், 2019 ஜூலை 15ல் வெளியாக உள்ள பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகையின் அட்டையில் மோடியின் படம் இடம் பெற உள்ளது.
மோடி-31%புடின்- 29%டிரம்ப்-21.9%ஜி ஜின்பிங்-18.1%

No comments:

Post a Comment