அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு விதிக்கப்படும் அதிக வரியை, இந்தியா குறைக்கணும்; ரத்து செய்ய வேண்டும், என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், தனியார், 'டிவி'க்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: அமெரிக்கா என்ற வங்கியை, கொள்ளையடிக்க அனைவரும்
விரும்புகின்றனர், முயற்சிக்கின்றனர். அதனால் தான், மற்ற நாடுகளுடனான நம் வர்த்தக உறவில் பெரிய பற்றாக்குறை உள்ளது. இதுதான் நீண்ட காலமாக நடந்து வந்துள்ளது. இதற்கு முன், இது
பற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. ஆனால், என்னுடைய ஆட்சியின்போது, நாட்டை ஏமாற்ற மாட்டேன். இனியும் நாங்கள் முட்டாளாக இருக்க மாட்டோம்.உதாரணத்துக்கு,
பற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. ஆனால், என்னுடைய ஆட்சியின்போது, நாட்டை ஏமாற்ற மாட்டேன். இனியும் நாங்கள் முட்டாளாக இருக்க மாட்டோம்.உதாரணத்துக்கு,
இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய அருமையான நண்பர், பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தார் தெரியுமா? நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும், ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு, 100 சதவீத வரி விதித்தார். அவருடன் தொலைபேசியில் பேசினேன். அதையடுத்து, இந்தாண்டு பிப்.,யில் அந்த வரி, 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால், இதுவும் அதிகம் தான்; இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தியாவில் இருந்து இங்கு இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு, நாம் எந்த வரியும் விதிக்கவில்லை. அதே போல், நம் மோட்டார் சைக்கிள்கள் மீதான வரியை, இந்தியா குறைக்க வேண்டும்; முடிந்தவரை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக, அவர்கள் ஆலோசித்து வருகினறனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment