மத்திய கிழக்கு நாடான ஈரானுடன் செய்து கொண்ட, அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. மேலும், ஈரானின் புரட்சிகர படையை, தீவிரவாத அமைப்பாகவும் அமெரிக்கா அறிவித்தது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என, மற்ற நாடுகளையும் நிர்பந்தித்து வருகிறது.இதையடுத்து, அமெரிக்கா, ஈரான் இடையேயான பிரச்னை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ஈரானுக்கு அருகில் உள்ள, ஓமன் வளைகுடா கடல் பகுதியில், எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பின்னணியில், ஈரான் உள்ளதாக, அமெரிக்கா கூறி வருகிறது.அதைத் தொடர்ந்து, மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் அவற்றின் கடல் பகுதியில், தனது படை பலத்தை
உயர்த்தப் போவதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீ கூறியதாவது: மத்தியக் கிழக்கு நாடுகள் பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பும் முடிவை அமெரிக்கா மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற வீண் முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. இந்தப் பிரச்னையில் இரு தரப்பும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களை நிர்ப்பந்திக்க வைக்கும் அல்லது துாண்டும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. அதே நேரத்தில், பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள், இந்த ஒப்பந்தத்தை தொடர்கிறதா, இல்லையா என, ஈரான் கேட்டுள்ளது. மேலும், அணு ஆயுதத் தயாரிப்புக்கு தேவையான, யுரேனியத்தை அதிக அளவில் சேமித்து வைக்க உள்ளதாகவும் கூறிஉள்ளது.
ஈரான் உடனான எங்கள் ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.புதிய படம் வெளியீடுமத்தியக் கிழக்கு நாடான ஈரானுக்கு அருகே, பெரிஷியன் வளைகுடா கடல் பகுதியில், கடந்த வாரம், இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை, ஈரானின், புரட்சிகர படை நடத்தியதாக, அமெரிக்கா குற்றஞ்சாட்டி வந்தது. இந்நிலையில், தனது வாதத்துக்கு வலுசேர்க்கும் வகையில், புதிய புகைப்படங்களை, அமெரிக்க ராணுவம் நேற்று வெளியிட்டுள்ளது. விமானப்படை ஹெலிகாப்டரில் இருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டதாக, அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

No comments:
Post a Comment