Friday, July 31, 2015
ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு இழைத்த
தவறுகள் அனைத்தும் திருத்தி அமைக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாத காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி
நாட்டுக்கு இழைத்த தவறுகளை திருத்திக் கொள்ள தேர்தலின் பின்னர் நடவடிக்கை
எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 58000 அபிவிருத்தித் திட்டங்களை இந்த அரசாங்கம் நிறுத்தியுள்ளதுடன் பதினைந்து லட்சம் பேரின் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மொனராகல் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் மோசமான சுகாதாரக் கொள்கைகளை பின்பற்றியதாக குற்றம் சுமத்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், பெனடேல் மாத்திரையின் விலையைக் கூட இதுவரையில் குறைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.