Friday, July 31, 2015

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்: டிலான் பெரேரா!

Friday, July 31, 2015
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மட்டுமன்றி, ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.

கொட்டாஞ்சேனை தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகத் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதாள உலகக் குழுக்கள் ஆதரவளிப்பதாகவும் அவ்வாறான பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment