Friday, July 31, 2015
இலங்கை காவல்துறை இராச்சியமாக மாற்றமடைந்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் நாட்டை ஓர் காவல்துறை இராச்சியமாக மாற்றியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளர்ர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கடும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழு ஆகியன காவல்துறை இராச்சியங்களில் செயற்படுவதனைப் போன்று செயற்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தினர் பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணிய பல வர்த்தகர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப் படவில்லை எனவும் பொய்யாகவே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment