Friday, July 31, 2015
இலங்கை அரசாங்கத்தினால் தேடப்படும்
சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் என வர்ணிக்கப்படும் முகமட் முபராக்குடன்
தான் காணப்படும் படத்தை பிரசுரித்தமைக்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர்
கோத்தபாய ராஜபக்ச தினமின செய்தித்தாளிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை
எடுக்கவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலஸ் டலகபெரும இதனை தெரிவித்தார்.
ராஜபக்ச ஓரு தேசிய வீரர், அவர் நாட்டிற்காக பல தியாகங்களை மேற்கொண்டுள்ளார். ராஜபக்ச முபாரக்கை செல்வம் படவெளியீட்டிலேயே சந்தித்தார். அந்த திரைப்படத்தின் இயக்குநர் விடுத்த அழைப்பின்பேரிலேயே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார், ஊடகங்கள் போதைப்பொருள் கடத்தல்புள்ளிக்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் தொடர்புள்ளதாக எவ்வாறு தெரிவிக்க முடியும் என அலகபெரும கேள்வி எழுப்பியுள்ளார்.
லேக்ஹவுஸ் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் உத்தரவின் கீழ் செயற்படுகின்றது. அவரது விசுவாசியின் சகோதரரே அதன் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமரிற்கு ஊடகவியலாளர்களுடன் தொடர்பில்லை அவர் எப்போதும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களையே தொடர்புகொள்கிறார் என அவர் தெரிவி;த்துள்ளார்.
No comments:
Post a Comment