Thursday, July 30, 2015

ஐக்கிய தேசிய கட்சி தமது ஆட்சியின் கீழ் பழிவாங்கும் செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுத்ததாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்!

Thursday, July 30, 2015
ஐக்கிய தேசிய கட்சி தமது ஆட்சியின் கீழ் பழிவாங்கும் செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுத்ததாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பதுளையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 180 நாட்கள் ஆட்சி காலத்தில் பழிவாங்கும் செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன.

நாட்டில் உள்ள சகல மக்களும் விடுத்த வேண்டு கோளுக்கு அமையவே தாம் மீண்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்...
 
ஜனவரி 8 ஆம் திகதி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த சென்ற இளைஞர்களுக்கு அந்த மாற்றத்தை 180 நாட்களுக்குள் புரிந்து கொள்ள முடிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி குண்டசாலை - மெனிக்கின்ன பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த இளைஞர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதி அனுபவமும் தெரிந்திருக்கவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்...
                      

No comments:

Post a Comment