Thursday, July 30, 2015

தேர்தல் வன்முறைகள், விதிமுறை மீறல்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு: கபே அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது!

Thursday, July 30, 2015
தேர்தல் வன்முறைகள் மற்றும் விதிமுறை மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கபே அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
 
பாராளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு வார காலத்துக்குச் சற்று கூடுதலான நாட்களே இருக்கும் நிலையில், இதுவரை  700 முறைப்பாடுகள் வந்துள்ளன என்று கபேயின் தேசிய அமைப்பாளர் அஹமட் மனாஸ் மகீன் பி.பி.சி. தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
இந்தச் சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை நடத்துவதாகவும் சட்டவிரோதமான வகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.
 
தேர்தல் வன்முறைகளைப் பொறுத்தவரை ஆதாரவாளர்கள் மீதான தாக்குதல்கள், தேர்தல் பிரசார  அலுவலகங்கள் மீதான தாக்குதல்களே கூடுதலாக இடம்பெற்றுள்ளன என்றும் மகீன் தெரிவித்தார்.
 
விருப்பு வாக்குகளை பெற்றுக் கொள்வது தொடர்பில்  ஒரே கட்சியினர் பல  இடங்களில் மோதிக்கொள்கிறார்கள் எனவும் கபேயின் அதிகாரி கூறுகிறார். கடந்த சில தினங்களில் கிழக்கு மாகாணத்திலிருந்து கூடுதல் முறைப்பாடுகள் கிடைத்திருந்தாலும் இதுவரை கொழும்பு தேர்தல் மாவட்டத்திலேயே  அதிகூடிய விதிமீறல்களும் வன்முறைகளும் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment