Friday, July 31, 2015
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பேரிடர் மீட்புக் குழுவினருடன் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர்கள் உதவியுடன், நேபாள ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.காஸ்கி மாவட்டத்தின் பொக்காரா பகுதியில் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்கள் 11 பேர்; ஆண்கள் 8 பேர்.
மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 14 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
பல வீடுகள் மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.இந்த சம்பவங்களில் மேலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மண்ணுக்கு அடியில் புதையுண்ட வீடுகளில் எவரேனும் உயிருடன் உள்ளனரா எனத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காத்மாண்டு:நேபாளத்தில் பலத்த மழையைத் தொடர்ந்து வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, 13 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 25 பேர் பலியாகினர்.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பேரிடர் மீட்புக் குழுவினருடன் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர்கள் உதவியுடன், நேபாள ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.காஸ்கி மாவட்டத்தின் பொக்காரா பகுதியில் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்கள் 11 பேர்; ஆண்கள் 8 பேர்.
மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 14 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
அதே மாவட்டத்தில் பதௌரே என்னும் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரு பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
மியாத்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உயிரிழந்தது. இந்த நிலச்சரிவுகளில் ஏராளமான வீடுகள் மண்ணுக்கடியில் புதையுண்டன.
மியாத்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உயிரிழந்தது. இந்த நிலச்சரிவுகளில் ஏராளமான வீடுகள் மண்ணுக்கடியில் புதையுண்டன.
பல வீடுகள் மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.இந்த சம்பவங்களில் மேலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மண்ணுக்கு அடியில் புதையுண்ட வீடுகளில் எவரேனும் உயிருடன் உள்ளனரா எனத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment