Friday, July 31, 2015
ஐக்கயி மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டும் என்ற எதிர்வு கூறல்களை பிரதமர்
ரணில் விக்ரமசிங்க மூடி மறைத்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடகப்
பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திரக் கூட்டமைப்பு கூடுதல் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் என கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபரங்களை வெளியிட வேண்டாம் என ரணில் விக்ரமசிங்க, ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் கோரியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இ;ந்த பேச்சுவார்த்தையின் போது அவ்வாறு செய்ய முடியாது எனவும் அனைத்து தரப்பிற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் ஒரு ஊடக நிறுவனத்தின் தலைவர் கூறியதாக டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த நிறுவனத் தலைவர் பேச்சுவார்த்தையின் இடைநடுவில் எழுந்து சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முதுகெலும்புடைய தலைவர் என்றால் அவர் விரைவில் பதவியை ராஜினாமா செய்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகளில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து கணிப்பு அறிக்கையை அரச ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடக தலைமை அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஒரு ஊடக நிறுவனத்தின் தலைவர் அவ்வாறு செய்ய முடியாது, அனைத்து தரப்புக்கும் இணையான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
ஊடக நிறுவனத்தின் அந்த தலைவர் இடைநடுவில் எழுந்து சென்றுள்ளார். அவர் முதுகெலும்பு உள்ளவர் என்றால், தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார்.
குறித்த ஊடக நிறுவனத்தின் தலைவர் முதுகெலும்பு பலத்துடன் பணியாற்ற சக்தி கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். தொடர்ந்தும் நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டால் அவர் பதவியில் இருந்து விலக தைரியம் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment