Friday, July 31, 2015
தற்போது, இந்தியாவின் மக்கள் தொகை, 131 கோடியாக உள்ளது. இது, 2030ல் 150 கோடியாகவும், 2050ல், 170 கோடியாகவும் உயரும். அதே சமயம், சீனாவின் தற்போதைய, 138 கோடி அளவிலான மக்கள் தொகை, 2030 வரை, மிதமான அளவிலே இருந்து, அதன் பிறகு, சற்று குறையும். இந்தியா, 2100 வரை, உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும்.
கடந்த, 2013ம் ஆண்டு ஆய்வறிக்கையில், மக்கள் தொகையில், இந்தியா, 2028ல் சீனாவை விஞ்சும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்த இலக்கு எட்டப்படும் என,
மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 2050 வரை, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும். அதன் பிறகு, 21ம்
நுாற்றாண்டின் இறுதியில், இந்திய மக்கள் தொகை, 166 கோடியாக சற்று குறையும்.தற்போது, 730 கோடியாக உள்ள உலக மக்கள் தொகை, 2030ல், 850 கோடியாகவும், 2050ல், 970 கோடியாகவும் உயர்ந்து, 2,100ல், 1,120 கோடியாக அதிகரிக்கும். 2015 - 50 வரையிலான காலத்தில், உலக மக்கள் தொகை வளர்ச்சியில், இந்தியா,
நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, அமெரிக்கா, இந்தோனேஷியா, உகாண்டா ஆகிய ஒன்பது நாடுகளின் பங்களிப்பு,
50 சதவீதமாக இருக்கும்.அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியா, அதிக அளவில் இளைஞர்களைக் கொண்ட நாடாக உருவெடுக்கும். இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம், 2025 - 30ல், 71.7 வயதாகவும், 2045 - 50ல், 75.9 ஆகவும், 2095 - 2,100ல், 84.6 வயதாகவும் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நியூயார்க்:இந்திய மக்கள் தொகை, மதிப்பீட்டை விட விரைவாக வளர்ச்சி கண்டு,
2022ல், சீனாவை விஞ்சும் என, உலக மக்கள் தொகை தொடர்பாக, ஐ.நா.,
வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் உள்ள விபரம்:
தற்போது, இந்தியாவின் மக்கள் தொகை, 131 கோடியாக உள்ளது. இது, 2030ல் 150 கோடியாகவும், 2050ல், 170 கோடியாகவும் உயரும். அதே சமயம், சீனாவின் தற்போதைய, 138 கோடி அளவிலான மக்கள் தொகை, 2030 வரை, மிதமான அளவிலே இருந்து, அதன் பிறகு, சற்று குறையும். இந்தியா, 2100 வரை, உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும்.
கடந்த, 2013ம் ஆண்டு ஆய்வறிக்கையில், மக்கள் தொகையில், இந்தியா, 2028ல் சீனாவை விஞ்சும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்த இலக்கு எட்டப்படும் என,
மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 2050 வரை, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும். அதன் பிறகு, 21ம்
நுாற்றாண்டின் இறுதியில், இந்திய மக்கள் தொகை, 166 கோடியாக சற்று குறையும்.தற்போது, 730 கோடியாக உள்ள உலக மக்கள் தொகை, 2030ல், 850 கோடியாகவும், 2050ல், 970 கோடியாகவும் உயர்ந்து, 2,100ல், 1,120 கோடியாக அதிகரிக்கும். 2015 - 50 வரையிலான காலத்தில், உலக மக்கள் தொகை வளர்ச்சியில், இந்தியா,
நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, அமெரிக்கா, இந்தோனேஷியா, உகாண்டா ஆகிய ஒன்பது நாடுகளின் பங்களிப்பு,
50 சதவீதமாக இருக்கும்.அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியா, அதிக அளவில் இளைஞர்களைக் கொண்ட நாடாக உருவெடுக்கும். இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம், 2025 - 30ல், 71.7 வயதாகவும், 2045 - 50ல், 75.9 ஆகவும், 2095 - 2,100ல், 84.6 வயதாகவும் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment