Friday, July 31, 2015

ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு: பெண் பலி ; பலர் காயம்!

Friday, July 31, 2015
கொழும்பு , கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் , அவர்களில் 2 பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு , கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு வேன்களில் வந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனையடுத்து காயமடைந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இருவர் அதி தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment