Friday, July 31, 2015

எதிர்­வரும் பாரா­ளுமன்ற பொது தேர்­தலில் வெற்­றி­யீட்டி ­ மக்கள் வழங்­கப்­போகும் 117 ஆச­னங்­களை கொண்டு ஐக்­கிய தேசிய கட்­சியின் தேசிய அர­சாங்க கனவை உடைத்­தெ­றிவோம்: முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ!

Friday, July 31, 2015
எதிர்­வரும் பாரா­ளுமன்ற பொது தேர்­தலில் தாம் அமோக வெற்­றி­யீட்­ட­வுள்­ள­தை­ய­டுத்து மக்கள் வழங்­கப்­போகும் 117 ஆச­னங்­களை கொண்டு ஐக்­கிய தேசிய கட்­சியின் தேசிய அர­சாங்க கனவை உடைத்­தெ­றிவோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்
 
பது­ளையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் மக்கள் சந்­திப்பில் பங்­கேற்று உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
 
ஐக்­கிய தேசிய கட்சி தமது ஆறு மாத கால ஆட்­சியில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்ட­மைப்பின் உறுப்­பி­னர்­களை பழி­வாங்­கு­வ­தை மட்­டுமே தொழி­லாக கொண்­டி­ருந்­தது.100 நாள் அர­சாங்­கத்தில் 180 நாட்கள் இவ்­வாறு பழி­வாங்­கலுக்­கா­கவே பயன்ப­டுத்­தப்­பட்­டது.
 
கடந்த ஆறு மாதம் இடம் பெற்ற ஐக்­கிய தேசிய கட்சி நாட்டை ஆட்சிசெய்த போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­பி­னதும் ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னதும் ஆட்­சிக்கு இடையில் வேறு­பா­டு­களை விளங்கிக்­கொண்­டுள்ள மக்கள் மீண்டும் மஹிந்த வேண்டும் என்ற நிலை­ப்பாட்­டிற்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர்.
 
அவ்­வாறு கோரிக்­கை விடுத்­த­மைக்கு அமை­யவே தேர்­தலில் மீண்டும் ஒரு­முறை போட்­டி­யிட தீர்­மா­னித்­துள்ளேன். அதனால் கடந்த ஜன­வரி மாதம் நாட்டு மக்கள் விட்ட சிறு தவறை மீண்டும் செய்­யக்­கூ­டாது. அவ்­வாறு முன்பு செய்த தவரை திருத்­திக்­கொள்ள நாட்டு மக்­க­ளுக்கு கிடைத்­துள்ள சந்­தர்ப்­பத்தை மக்கள் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.

அதனால் எதிர்­வரும் தேர்தலின் பின்னர் நாம் ஐக்கிய தேசிய கட்சி தற்போது விதைத்துள்ள தேசிய அரசாங்கம் என்ற கனவை தகர்த்து தனியாட்சியொன்று அமைப்போம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment