Thursday, July 30, 2015

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் எந்த கட்சிக்கும் ஆதரவின்றி நடு நிலைமை என்கிறார் - வடமாகாண முதலமைச்சர்!

Thursday, July 30, 2015
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் எந்த கட்சிக்கும் ஆதரவின்றி நடுநிலை வகிக்கவிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு இடம்பெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலேயே போட்டியிட்டு வடமாகாண முதலமைச்சராக அவர் பதவி ஏற்றிருந்தார்.

ஆனாலும், முதலமைச்சராக இருந்து அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதை முறையான விடயமாக தாம் கருதவில்லை என்று அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தாம் தேர்தலில் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தேர்தலுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளக்கூடாது என்பதே தமது நிலைப்பாடு என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், தமிழ் மக்களின் அரசியல் ரீதியான போராட்டம் பெரும்பான்மை சமுகத்தினால் மூழ்கடிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
                       

No comments:

Post a Comment