Thursday, July 30, 2015

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் தடையாக அமைந்துள்ளது: ஜாதிக ஹெல உறுமய!

Thursday, July 30, 2015
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் தடையாக அமைந்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய வேட்பாளர் நிசாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.
 
ஜாதிக ஹெல உறுமய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், 1948 முதல் இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இதேபோன்ற இனவாத விஞ்ஞாபனங்களையே வெளியிட்டு வந்தனர்.
 
தமிழ் அரசு கட்சி ஆரம்பித்ததால் தமிழ் இனம் வேறு திசைக்கு தள்ளப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்துக்கிருந்த தடைகளை அகற்ற த. தே. கூ. ஒத்துழைப்பு வழங்கியது. இதேபோன்று தமிழ் சமூகம் மீண்டும் இனவாதத்தின் பக்கம் செல்வதை தடுக்க தமிழ் அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் தலைவர்கள் தொடர்ந்தும் தமிழ் சமூகத்தை தவறாக வழி நடத்தி சமஷ்டி ஊடாக நாட்டை துண்டாட முயன்றால் சம்பந்தன் போன்றவர்களுக்கும் வரலாற்றில் குப்பை தொட்டிக்குள் வாழ நேரிடும்.
1
948 முதல் தமிழ் ஈழ கருத்தை தமிழ் சமூகத்திற்கு ஊட்டி ஆயுதம் ஏந்த உதவிய இவர்கள் இன்று ஆயுதம் வழங்க முடியாததால் மீண்டும் இனவாத அரசியலினூடாக தமது நோக்கத்தை நிறைவேற்ற முயல்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment