Thursday, July 30, 2015
இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக சமஸ்டி தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதி வெளியுறவு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தீர்வு ஒன்று காணப்படுமானால் இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழமுடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டி தீர்வை வலியுறுத்தியுள்ளது.இது தென்னிலங்கையில் தற்போது தீவிரமாக பேசப்படும் கருவாக மாறியுள்ளது.
இந்த நிலையில் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களை பகிர்வதே ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை என்று அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி கட்டமைப்புக்குள் அதிகூடிய அதிகாரப்பகிர்வு அவசியம்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியுள்ள நிலையில், ஒற்றை ஆட்சிக்குள் அதிகூடிய அதிகாரப்பகிர்வை வழங்குவோமே தவிர, சமஷ்டி முறைமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்'' என்று ஐக்கிய தேசியக் கட்சிஉறுதியாகத் தெரிவித்துள்ளது. அத்துடன், நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்ட
மைப்பின் ஆதரவைத் தாம் எதிர்பார்க்கவில்லை என்றும், பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற்று ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment