Thursday, July 30, 2015

ஐ.தே.க. கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஐ.தே.க. நிறைவேற்றும். அதற்கமைவான தேர்தல் விஞ்ஞாபனத்தையே அவர்கள் முன்வைத்துள்ளனர்: உதய கம்மன்பில!

Thursday, July 30, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மஹிந்தவின் கொள்கைக்கே இணங்கிப்போவதாகவும் ஆனால், மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகளுக்கு எதிரானதாகும் என்றும் பிவிதுறு யஹல உறுமயவின் தலைவரும் கொழும்பு மாவட்ட ஐ.ம.சு.மு. வேட்பாளருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
 
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- "ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது.
 
நாங்கள் பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி என அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றுவதற்கான திட்டங்களையும் மக்கள் நல அம்சங்களையுமே உள்வாங்கியுள்ளோம். ஆனால், ஐ.தே.கவின் தேர்தல் விஞ்ஞாபனம் அதற்கு நேர்மறையான திட்டங்களைக் கொண்டுள்ளது. அரச நிறுனங்களைத் தனியார்மயப்படுத்தும் கொள்கையையே ஐ.தே.க. கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஐ.தே.க. நிறைவேற்றும். அதற்கமைவான தேர்தல் விஞ்ஞாபனத்தையே அவர்கள் முன்வைத்துள்ளனர்.
 
 அமெரிக்க இந்தியா நாடுகள் சமஷ்டி முறையில் சுயாட்சியை எவ்வாறாவது ஐ.தே.கவிடமிருந்து பெற்றுத் தருவதாக த.தே.கூவிடம் வாக்குறுதி வழங்கியுள்ளது. ஆகவே, ஐ.தே.கவை உறுதிப்படுத்தும் வகையில் த.தே.கூவுக்கு செயற்படுமாறும் அந்நாடுகள் ஆலோசனை வழங்கியுள்ளன.
 
இலங்கை வரலாற்றில் போர்த்துக்கேயரின் கைப்பொம்மையாக இருந்த தொன் ஜுவானுக்கு அடுத்து அமெரிக்க இந்திய நாடுகளின் கைப்பொம்மையாக செயற்படுவது ரணில் விக்கிரமசிங்கவாகும். மற்றுமொரு தொன் ஜுவான் ரணில் சர்வதேசத்துக்கு தேவைக்கேற்பவே செயற்படுகின்றார்" - என்றார். ஐ.ம.சு.மு. தேர்தல் விஞ்ஞாபனமானது மைத்திரிபாலவின் கொள்கைகளுக்கு முரணானதாக அமைந்துள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "முரணானதாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு இணங்கிப்போகத்தான் வேண்டும்.
 
மாற்றுக் கருத்துடையவர்கள் திருமணப்பந்தத்தில் இணைந்து விட்டுக்கொடுப்புடன் வாழ்க்கை நடத்துவது போன்றே செயற்படவேண்டும். முரண்பாடுகள் இருந்தாலும் மைத்திரியின் திட்டம் 100 நாட்களை அடிப்படையாகக்கொண்டது"

No comments:

Post a Comment