மகிந்தராஜபக்ஸ
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கிழக்கு மாகாண சபைக்கு தமிழர்
ஒருவரை முதலமைச்சராக்குவோம் என பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு
மாவட்ட இணைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.நேற்று மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள
பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து
கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கூறுகையில்
மகிந்த ராஜபக்ச தலைமையிலான எமது
கட்சியின் பணிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 326 கிராமசேவையாளர்
பிரிவிலும் விரிவுபடுத்தியுள்ளோம்.எங்களது கடந்த ஆட்சிக்காலத்தில் தான் கிழக்கு மாகாண சபைக்கு தமிழ் முதலமைச்சரை கொண்டுவந்தோம்.58 ஆயிரம்