இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பேசுவோரை – செயற்படுவோரை முடக்கும் வேலைகளுக்காக துருக்கியில் இருந்து 40 மில்லியன் டொலர் இலங்கைக்கு வருவதாக பொதுபலசேனாவின் ஞானசார தேரர் நேற்று இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
ஞானசார தேரர் மேலும் கூறியதாவது,
“கடந்த ஆட்சி தொடர்ந்து கோட்டாபய பாதுகாப்பு செயலராக இருந்திருந்தால் அப்போது இந்த பிரச்சினைக்கு முடிவை காட்டியிருப்பார். இப்போதைய கோட்டபாய எப்படியோ என்று தெரியாது. ஆனால் அன்று நாங்கள் சொன்னதை அவர் கேட்டார். நாட்டுக்கு ஒரு ஆபத்து இருப்பதை அவர் உணர்ந்து கொண்டார்.
இலங்கையில் 41 அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் உள்ளன. அதை நாங்கள் கூறினோம்.நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பற்றி நாங்கள் அப்போது எச்சரித்திருந்தோம்.ஷிப்லி பாரூக்கும், அப்துல் ரகுமானும் சஹ்ரானை நாட்டில் இருந்து வெளியில் அனுப்ப முயற்சிகளை எடுத்ததை பற்றி கூறினோம்.அன்று நடவடிக்கை எடுக்க தவறியதால் சஹ்ரான் இந்தியா சென்று பயிற்சி பெற்று உலக தீவிரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தினார் .
முஸ்லிம் மக்கள் அடிப்படைவாத கோட்பாடுகளில் இருந்து விலகி வெளியில் வர வேண்டும்.எம்முடன் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.எமது நாட்டின் அரசியல்வாதிகளே நரேந்திர மோடியை உதாரணத்துக்கு எடுத்து செயற்படுங்கள். முஸ்லிம் வாக்குகளை எடுப்பதற்காக நாட்டை விற்க வேண்டாம் என்று அரசியல்வாதிகளை கேட்டுக் கொள்கிறேன்.அமைச்சர்கள் பலர் அடிப்படைவாதிகளுடன் தொடர்பில் உள்ளனர் .
2012 ஆம் ஆண்டு 1000 கோடிக்கும் மேல் இலங்கைக்கு வந்தது. அமைச்சர் றிஷார்ட் எல்லாவற்றையும் மூடிமறைத்து இதனை கொண்டுவந்தார்.40 மில்லியன் டொலர் துருக்கியில் இருந்து வருகிறது.இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக பேசுவோரை முறியடிக்க அந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. யூசுப் அல் கர்டாவி என்ற இஸ்லாமிய பெரியாரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவரும் அமைச்சர் ஹக்கீமின் இணைப்பாளர் நயீமுல்லாவும் சந்தித்தது ஏன் ? முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு அண்மையில் துருக்கியில் இருந்து கணினிகள் வந்தது ஏன் என்று கேளுங்கள் .விரைவில் நாங்கள் பல விடயங்களை வெளிப்படுத்துவோம்”, என்றார் ஞானசார தேரர்.
அதேபோல் சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமெனவும், அவர் ஏன் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும் ஞானசார கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment