Tuesday, May 28, 2019

வடக்கு மாகாணத்தின் புதிய பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுனவர்த்தன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்!

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுனவர்த்தன தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அலுவலகத்தில் பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையுடன் அவர் அழைத்து வரப்பட்டார். பின்னர் மத தலைவர்களின் ஆசியுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வந்த ரொசாந்த் பெர்னாண்டோவுக்கு
இடமாற்றம் கிடைக்கப் பெற்றதை அடுத்து தென் மாகனத்தில் கடமையாற்றி வந்த விஜய குணவர்த்தன வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment