சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாதவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் காவல்துறைமா அதிபருக்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.
இதற்கமைய, காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு மேலதிகமாக தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி மற்றும் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ஆகியோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment