Friday, May 24, 2019

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை பிரஜை ஒருவர் மியன்மாரில் கைது!

ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார்.தன்னுடைய சுற்றுலா விசாவினை புதுப்பிக்க யாங்கூன் நகரில் உள்ள குடிவரவு அலுவலகத்தில் சென்றபோதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.39 வயதுடைய அப்துல் சலாம் இர்ஷாட் மொஹமட் என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.குறித்த நபர் சுமார் 1 வருடம் 2
 
மாதங்களுக்கும் மேலாக மியன்மாரில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் மலேசிய பொலிஸாரினால் அனுப்பப்பட்ட எச்சரிக்கையினை தொடர்ந்து, யாங்கோன் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த புதன் கிழமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment