Saturday, May 25, 2019

பிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் நான்கு பேர் கைது!

பிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில் வௌிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஒன்றை நிறுத்தி பரிசோதனை செய்யும் போது துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. சந்தேகநபரிடமிருந்து 200 கிராம் வெடிபொருளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் மொரவக்க, பேலியகொட மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்..

சந்தேக நபர்கள் மொரவக, பேலியகொட மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
 
245 கிலோ கிராம் கேரளா கஞ்சா தொகையுடன் 02 பேர் கைது!
 
245 கிலோ கிராம் கேரளா கஞ்சா தொகையுடன் இரு சந்தேக நபர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை படகு ஒன்றுடன் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கடற் படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment