இலங்கை-அமெரிக்க இடையிலான ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளுக்குமான உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கைக்கான
அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று கண்டியில், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.இதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,இரண்டு நாடுகளுக்கும் இடையிலான, ஒத்துழைப்பின்
மூலம், பாதுகாப்புக்கான உறுதியான அடித்தளம் இடப்பட்டுள்ளது.கூட்டாக பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக சிறிலங்காவுடன் நாங்கள் உடன்பாடு செய்துள்ளோம்.
கடந்த அரசாங்கத்துடன் கூட இதுபோன்ற உடன்பாடுகளை நாங்கள் செய்திருக்கிறோம்.எனினும், சிறிலங்காவில் நிரந்தரமான தளத்தை அமைக்க நாங்கள் தீர்மானிக்கவில்லை. அதுகுறித்து எந்த உடன்பாடும் கிடையாது.அமெரிக்கப் படைகள் பயணங்களை மேற்கொள்வதற்கு அனுமதிப்பதற்கு மாத்திரம் உடன்பாட்டை எட்டியுள்ளோம்.எனவே நாங்கள் இணைந்து பணியாற்ற முடியும்.நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த உதவி, மிகவும் முக்கியமானது.இரண்டு நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் பிராந்தியப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு எமது இருதரப்பு உறவுகள், அனுமதிக்கும்.” என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment