அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவரைக் கைதுசெய்வது மாத்திரமல்லாது தூக்கிலிட வேண்டும்.” இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்
மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,ரிஷாத் பதியுதீன் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை நிரூபித்துக்கொள்ள பொலிஸார் விசாரணைகளை
ஆரம்பிக்க வேண்டும்.அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைதுசெய்வது மாத்திரமல்லாமல் தூக்கிலிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கான முழு ஒத்துழைப்பையும் நாடாளுமன்றத்தினூடாகப் பெற்றுக்கொடுப்போம்.பயங்கரவாதிகளுக்கு நாடாளுமன்றத்தில் அடைக்கலம் கொடுக்க முடியாது. குற்றவாளிகள் தொடர்பாக விசாரணை செய்யும் அதிகாரமும் நாடாளுமன்றத்துக்கு கிடையாது” – என்றார்.

No comments:
Post a Comment