Monday, May 27, 2019

3000 படையினர் கொழும்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாரிய தேடுதல்!

ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர்.
 
பொலிஸாருடன், 3000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் இந்த தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
 
ஏனைய பகுதிகளிலும், இது போன்ற தேடுதல்கள், பிராந்திய பாதுகாப்பு படை தலைமையகங்கள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று இராணுவ பதில்
பேச்சாளர் மேஜர் ஜெனரல் றொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment