Tuesday, May 21, 2019

மைத்திரிபால சிறிசேன, மீண்டுமொரு தடவை ஜனாதிபதி பதவிக்காலத்தை நீடிக்கமாட்டார்: மஹிந்த ராஜபக்ச! Photos

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வழமைப் போன்று இடம்பெற்றுள்ளது.அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை பாடசாலை மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காகவும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை பாடசாலைகளுக்கு சென்றிருந்தனர்.
 
இலங்கையில் தீவிரவாதத்திற்கு எதிராகவும், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தியும் மக்களுக்காக தாமே இன்று இறங்கி சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச
தெரிவித்துள்ளார்.இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, மீண்டுமொரு தடவை ஜனாதிபதி பதவியை வகிப்பதற்காக பதவிக்காலத்தை நீடிக்கமாட்டார் என்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒருமாதம் பூர்த்தியாகின்ற நிலையில், இந்த தாக்குதலுக்குப் பின்னர் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்தது.
 
இருந்த போதிலும் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பாடாது இன்று முதல் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப நடடிவக்கை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு தரப்பினர் பெற்றோர்களிடம் கோரியுள்ளனர்.இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இந்த கோரிக்கையை நேற்று விடுத்திருந்தார்.
 
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் காலை ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பிலுள்ள சில பிரபல பாடசாலைகளுக்கு விஜயம் செய்தனர்.
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு தொடர்பில் இதன்போது அவர்கள் கேட்டறிந்துகொண்டனர்.
 
இந்த விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்தன, கனக ஹேரத் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.பாடசாலைகளுக்கான விஜயங்களை முடித்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தீவிரவாதத்திற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
 
இன்று ஏற்பட்டுள்ள நிலைமையில் அரசாங்கமா அல்லது எதிர்கட்சியா என்பது பிரச்சினையில்லை. மக்களிடையே ஏற்பட்டிருக்கும் அச்சத்தை நீக்குவதே முதற்பணியாகும். மாணவர்களுக்கு தினந்தோறும் பாடசாலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்க முடியாது. பணியாளர்களுக்கு அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் தினமும் வீட்டிற்குள் இருக்கமுடியாது. அப்படியிருந்தால் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாணவர்கள் பாடசாலைக்கு சென்றால்தான் நம்பிக்கை பலமாகும். பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி, பொலிஸ்மா அதிபர் கூறினால் நாங்கள் அச்சமின்றி நடமாட முடியும். இப்படி சம்பவம் இடம்பெற்றால் அதனை கட்டுப்படுத்த மக்கள் அனைவரையும் வீதிக்கு வரவழைத்து நிறுத்தியிருக்க வேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் தீவிரவாதத்திற்கு நாங்கள் அடிபணிவதுபோலாகிவிடும் அதனால்தான் நாங்கள் வீதிக்கு இறங்கி மக்களுக்கு ஒரு முன்னுதாரணத்தை வழங்குகிறோம். அச்சமடையாமல் வாருங்கள் என்று கூறுகின்றோம்”
 
இதேவேளை ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரி மாதத்துடன் நிறைவுக்கு வருகின்ற நிலையில், அந்தப் பதவிக்காலத்தை நீடிப்பது குறித்த உத்தியோகபற்றற்ற பல்வேறு தகவல்கள் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
எனினும் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி பதவியில் ஒருதடவையே இருப்பதாக தெரிவித்திருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பதவிக்காலத்தை நீடிக்கமாட்டார் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

No comments:

Post a Comment