கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.இந்த
வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் வரலாற்றிலேயே மறக்க முடியாத
நாளாகும். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு உட்பட நாட்டின் பல
பகுதிகளிலும் தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதம்
கடக்கின்றது.21ஆம் திகதி காலை 8.45 மணியளவில் முதல் தாக்குதல் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பதிவானது.தொடர்ந்து, மட்டக்களப்பு – சியோன் தேவாலயம், நீர்கொழும்பு – கட்டான
கட்டுவப்பிட்டிய தேவாலயம், கொழும்பில் சினமன் கிராண்ட் ஹோட்டல், சங்கரில்லா
ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், தெஹிவளை ட்ரொபிகல் இன், தெமட்டகொடை மகவில
பூங்கா போன்ற பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால்
பல அப்பாவி மக்களின் உயிர் கொத்து கொத்தாக பறிபோனது. இத்தாக்குதல்களில்
உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் புனித அந்தோனியார் தேவாலய
வளாகத்தில் இன்று நினைவு பிரார்த்தனைகள் இடம்பெற்றன.பெரும்திரளான
மக்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க தமது வேண்டுதல்களை முன்வைத்ததோடு
உயிரிழந்தவர்களுக்காக மனதுருகி பிரார்த்தனை செய்து கொண்டனர்.
No comments:
Post a Comment