Saturday, May 30, 2015

மகிந்த ராஜபக்ச தலைமையில் மூன்றாவது அணி ஒன்றை நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் களமிறக்க நடவடிக்கைகள் !

Saturday, May 30, 2015
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் மூன்றாவது அணி ஒன்றை நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் களமிறக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எம்.பிக்களை இணைக்க தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை களமிறக்க முடியாது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உறுதியான அறிவிப்பை அடுத்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
நேற்று முன்லிதினம் அபலியலிராம விகாலிரையில் முன்னாள் ஜானலிதிலிபதி மஹிந்லித ராஜலிபக்லிஷலிவை தலைமையில் நடந்த சந்திப்பில் மஹிந்த கூட்லிடணி தொடர்பான திட்லிடங்லிகள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மீண்டும் ஐக்லிகிய மக்கள் சுதந்லிதிரக் கூட்லிடலிமைப்பின் ஆட்லிசியை கொண்லிடுலிவர வேண்லிடுலிமென்லிபதே எம் அனைலிவலிரிலினதும் எதிர்லிபார்ப்லிபு என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த சந்திப்பு தொடர்பில் தெரிவித்தார்.
ஜனாலிதிலிபதி மைத்லிதிலிரிலிபால சிறிலிசேன ஐக்லிகிய மக்கள் சுதந்லிதிரக் கூட்லிடலிமைப்பை ஒன்லிறிலிணைக்க முயற்லிசிக்லிகலிவில்லை. மாறாக ஐக்லிகிய தேசியக் கட்லிசியின் ஆட்லிசியை பலப்லிபலிடுத்த முயற்லிசிக்லிகின்றார் என்றும் வாசுதேவ குற்றம் சுமத்தினார்.
 
அத்துடன் எதிர்லிவரும் பொதுத் தேர்லிதலில் பிரலிதமர் வேட்லிபாலிளலிராக களலிமிலிறக்க மஹிந்த தான் தகுலிதிலியான வேட்லிபாளர். கடந்த ஜனாலிதிலிபதித் தேர்லிதலின் போது மஹிந்த ராஜபக் ஷவுக்கு 57 இலட்சம் வாக்லிகுகள் கிடைத்லிதுள்லிளதை ஜனாலிதிலிபதி மறந்லிதுலிவிடக் கூடாது என்றும் வாசுதேவ குறிப்பிட்டார்.
 
பெரும்லிபான்மை மக்கள் இன்றும் முன்னாள் ஜனாலிதிலிபதி மஹிந்லிதவை ஆதலிரிக்லிகின்லிறனர். ஆயிரக் கணக்லிகிலிலான மக்கள் அவரை சென்று பார்க்லிகின்லிறனர். அவலிருக்லிகாக நாம் ஏற்லிபாடு செய்லிதுள்ள மக்கள் கூட்லிடங்லிகளை வந்து பார்த்தால் உண்மை என்லினலிவென்லிபது தெரியும் என்றும் கூறினார்.
 
இன்று மக்கள் வரம் இல்லிலாத ரணில் விக்லிகிலிரலிமலிசிங்க பிரலிதலிமாலிராக உள்ளார். ஆட்சி செய்ய தகுதி இல்லிலாத ஐக்லிகிய தேசியக் கட்சி அரலிசாங்லிகத்தை நடத்லிதுலிகின்லிறது. மக்கள் இந்த அரலிசாங்லிகத்தை ஆதலிரிக்லிகலிவில்லை. மைத்லிதிலிரிலிபால சிறிலிசேலினலிவையே மட்லிடுமே கடந்த தேர்லிதலில் மக்கள் ஆதலிரித்லிதனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஸ்ரீலங்கா சுதந்லிதிரக் கட்லிசியில் மஹிந்த ராஜபக் ஷவை களலிமிலிறக்லிகுலிவதே எம் அனைலிவலிரிலினதும் எதிர்லிபார்ப்லிபாகும். அதற்கு ஜனாலிதிலிபதி இடம் கொடுக்க வேண்டும். அப்லிபடி ஸ்ரீலங்கா சுதந்லிதிரக் கட்லிசியில் மஹிந்லிதவை களலிமிலிறக்லிகாலிவிடின் வேறு தீர்லிமாலினங்லிகளை எடுக்க வேண்லிடிய நிலைமை ஏற்லிபடும் என்லிறு மேலும் வாசு தேவ குறிப்பிட்டார்.
 
ஐக்லிகிய மக்கள் சுதந்லிதிரக் கூட்லிடலிணியை பலப்லிபலிடுத்த வேண்லிடுலிமாயின் மஹிந்த மீண்டும் கட்லிசியில் முக்லிகிய பங்லிகினை வகிக்க வேண்டும். ஆனால் ஜனாலிதிலிபதி மைத்லிதிலிரிலிபால சிறிலிசேன அதற்கு இணக்கம் தெரிலிவிக்லிகாலிவிடின் மூன்லிறாலிவது கட்லிசிலியாக களலிமிலிறங்லிகுவோம் என்று லங்கா சமலிசலிமாஜக் கட்லிசியின் தலைவர் திஸ்ஸ விதாலிரண  தெரிவித்தார்.
 
மஹிந்லிதவின் தலைலிமையில் கீழ் பலர் கைகோர்க்க தயாலிராலிகவே உள்லிளனர். எனவே மூன்லிறாலிவது கட்லிசியும் சாத்லிதிலியலிமாலினதே என்லிபதை அனைலிவரும் விளங்லிகிக்லிகொள்ள வேண்டும் என்று அவர் மேலும் குறிப்லிபிட்டார்

புலிகள் மீண்டும் தலைத்தூக்கிவிடுவார்கள்: முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ!

Saturday, May 30, 2015
புலிகள் மீண்டும் தலைத்தூக்கிவிடுவார்கள் என்ற கவலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அனுராதபுரம் ஜயசிறிமகாபோதியில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறியுள்ளார்.

தற்போதைய சூழல் தமக்கு இந்த கவலையை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலிகள் மீள ஒருங்கிணையக் கூடுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அச்சம் வெளியிட்டுள்ளார்.

புலிகள் மீளவும் நாட்டில் பயங்கரவாதத்தில் ஈடுபடக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீளவும் பயங்கரவாதம் தலைதூக்காது என நம்புவோமாக என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...


நாட்டின் ஆட்சியாளர் குரோத உணர்வில் செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வாரியபொல பௌத்த விஹாரை ஒன்றில் மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த காலங்களில் வழக்கு விசாரணைகளின் பின்னர் தண்டனை விதிக்கப்பட்டது என்ற போதிலும், தற்போது தண்டனை விதித்து அதன் பின்னர் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.


அண்மையில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னரே உயர் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த காலத்தில் நாட்டில் அபிவிருத்தி ஏற்பட்டதா இல்லையா என்பதனை மக்களே தீர்மானித்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றதா என்பதனை மக்களைப் போன்றே தானும் அவதானித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


ஆட்சியோர் குரோத உணர்வுடன் ஆட்சி நடத்தி வருவதாகவும், இது எதிர்கால சந்தத்தியினருக்கு பிழையான வழிகாட்டலாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பிரதமர் வேட்பாளராக மஹிந்தவை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதனைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியாளர் குரோத உணர்வுடன் செயற்படுவதாக நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Friday, May 29, 2015

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இலவசமாக சேமிக்க கூகுள் போட்டோ என்ற புதிய அப் மற்றும் இணையதளம் அறிமுகம்!!

Friday, May 29, 2015 
சான் பிரான்சிஸ்கோ: புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இலவசமாக சேமிக்க வகை செய்யும் ‘கூகுள் போட்டோ’ என்ற புதிய அப் மற்றும் இணையதளதை அறிமுகம் செய்துள்ளது கூகுள்.

ஆண்டுதோரும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கூகிள் I/O என்ற மாநாட்டை நடத்தி வருகிறது கூகுள் நிருவனம். வழக்கமாக இந்த மாநாட்டில் முக்கிய அறிப்புகளை கூகுள் வெளியிடும். அதன்படி இந்த ஆண்டு ‘கூகுள் போட்டோ’ என்ற புதிய அப் மற்றும் இணையதளதை அறிமுகம் செய்தது.

கூகுள் போட்டோ அப் ஆன்ராய்ட்டு போன்கள், ஆப்பிள் போன்கள் மற்றும் கணினிகள் ஆகிவற்றில் இயங்கும். இதில் உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் எந்தவித வரம்பும் இல்லாமல் பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள முடியும். உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த புதிய வசதி நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

நைஜீரியாவில் (புலிகளின் பானில்) தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஐ.நா. அதிர்ச்சி தகவல்!!

Friday, May 29, 2015      
ஜெனீவா:ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடான நைஜீரியா, போகோ ஹரம் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி பெரும் இன்னலுற்று வருகிறது. சாட், நைஜர் மற்றும் கேமரூன் நாடுகளிலும் இந்த தீவிரவாதிகள் காலூன்றி இருந்தாலும், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியை தங்கள் ஆதிக்க பூமியாக கொண்டு உள்ளனர்.

நைஜீரியாவின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி வரும் இவர்கள், தங்கள் தீவிரவாத பணிகளுக்காக (புலிகளின் பானில்) பெண்கள், குழந்தைகளை அடிக்கடி கடத்திச்செல்லும் நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் போர்னோ மாநிலத்தின் சிபோக் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கூட 200 பெண் குழந்தைகளை கடத்திச்சென்றது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குழந்தைகளை மீட்க முடியாமல் நைஜீரிய ராணுவமும், பாதுகாப்பு படையினரும் திணறி வருகின்றனர்.

இந்த தீவிரவாதிகளின் முகாம்கள் மீது கடந்த மாதம் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட சுமார் 300 பேர் மீட்கப்பட்டனர். எனினும் சிபோக் பள்ளிக்குழந்தைகளை இன்னும் மீட்க முடியவில்லை.

இந்த நிலையில் போகோ ஹரம் தீவிரவாதிகள் குழந்தைகள் மற்றும் பெண்களை தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயன்படுத்தி வருவதாகவும், இப்படிப்பட்ட தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருவதாகவும் ஐ.நா. அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.

யுனிசெப் எனப்படும் ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் சிறப்பு உறுப்பினர் லாரென்ட் கூறுகையில், ‘நைஜீரியாவில் கடந்த ஆண்டு 26 தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த ஆண்டு இன்னும் 6 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் 27 தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலான தாக்குதல்களில் ஈடுபட்டது குழந்தைகளும், பெண்களுமே’ என்று தெரிவித்தார்.

குழந்தைகள் மற்றும் பெண்களை வேண்டுமென்றே அச்சுறுத்தி இந்த தாக்குதல்களில் ஈடுபடுத்தி வருவதாக யுனிசெப்பின் நைஜீரியாவுக்கான தூதர் ஜீன் காவ் கூறியுள்ளார்.

பெண்களால் மிகவும் எளிதாக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை தங்கள் ஆடைகளுக்குள் மறைத்து கொண்டு செல்ல முடியும் என்பதால், இப்படிப்பட்ட தாக்குதல்களால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் முகமது புகாரி வெற்றி பெற்றார். நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் போட்டியிட்ட அவருக்கு, கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பெருவாரியாக வாக்களித்தனர்.

நைஜீரியாவின் புதிய அதிபராக முகமது புகாரி இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்கும் நிலையில், அங்கு போகோ ஹரம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுமா? என அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் ஆவலோடு எதிர்பார்க்கின்றன.

யாழ்ப்பாண நீதிமன்ற தாக்குதல் மாணவர்களை சந்தித்தது (புலி)கூட்டமைப்பு!

Friday, May 29, 2015      
யாழ்ப்பாண நீதிமன்ற தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் குழு ஒன்று நேற்று சந்தித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 37 மாணவர்கள் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் குறித்த முழுமையான விபரங்கள் இன்று உரிய தரப்பினருக்கு வழங்கப்படும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அவர்களை விடுவிக்க முயற்சிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் சென்றிருந்த சமயம், குறித்த மாணவர்களை விடுவிப்பது தொடர்பாக வடமாகாண முதலமைச்சரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
            

Thursday, May 28, 2015

பாலியல் குற்றச்சாட்டு: இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் மூவர் பதவி நீக்கம்!.

Thursday, May 28, 2015
இலங்கை கிரிக்கெட் மகளிர் அணி பாலியல் லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மூன்று அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
பாலியல் லஞ்சம் தொடர்பில் நடத்தப்பட்ட உள்ளக விசாரணையில் மூவர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் மூன்று நபர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதியளவு ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர்களை பதவி நீக்கம் செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் சேர வீராங்கனைகளிடம் அதிகாரிகள் பாலியல் லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதாக விசாரணைக் குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
கடந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இதனை விசாரிக்க கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நிமல் திஸ்சநாயக தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
 
இக்குழுவின் விசாரணையில் மகளிர் கிரிக்கெட் அணி நிர்வாகிகள் பலர், வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் கும்பல்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது!

Thursday, May 28, 2015
வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் கும்பல்கள் குறித்து கொழும்பு கட்டுநாயாக்க விமானநிலைய ஊழியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட கும்பல் இந்திய பெண்களை சுற்றுலாப்பயணிகள் போன்று இலங்கைக்க அழைத்து வந்து பின்னர் அவர்களை வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசாங்கம் தங்கள் நாட்டுப்பெண்கள் மத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்வதை தடைசெய்துள்ளதால்,இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் சில இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து அவர்கள் சிறிய குழுக்களாக சுற்றுலாப்பயணிகள் போல வருகின்றனர். இதன் பின்னரே இரகசிய, சட்டவிரோத நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன, அவர்களுக்கு உதவுவதற்கு என குறிப்பிட்ட சில நபர்கள் விமானநிலையத்தில் உள்ளனர்,அவர்கள் அவர்களுக்கு உதவி வழங்கி மத்தியகிழக்கிற்கு உடனடியாக அனுப்பிவைக்கின்றனர், என விமான நிலைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

20ம் திருத்தங்களுக்கு இடமளித்து, தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, May 28, 2015
மேலும் திருத்தங்களை மேற்கொள்ள இடமளித்து 20ம் திருத்தச் சட்டமான தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவையின் முதல்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தேர்தல் முறைமை சீர்த்திருத்தம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள்உள்ளிட்ட பல கட்சிகள் தங்களின் யோசனைகளை கடந்த வாரம் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தன.

பின்னர் இது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

நேற்றையதினம் இடம்பெற்றிருந்த அமைச்சரவை கூட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் பி.திகாம்பரம் ஆகியோரால் புதிய பல யோசனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த யோசனைகளையும் உள்ளடக்கும் விதத்தில் மேலும் சீர்த்திருத்தங்களுக்கு இடமளிக்கும் வகையில் குறித்த சீர்த்திருத்தச் சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
            

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, குருநாகல் மேல் நீதிமன்றத்தினால் சற்று முன்னர் பிணையில் விடுதலை !

Thursday, May 28, 2015
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, குருநாகல் மேல் நீதிமன்றத்தினால் சற்று முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலுமே அவரை, குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்னாயக்க விடுதலை செய்துள்ளார்.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்.பி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சருக்கு அப்பால் கைதுசெய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆர்.எம்.ஏ. பெர்ணான்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மொஹமட் சாகீர் ஆகியோருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்குகிறாரா குஷ்பு?

Thursday, May 28, 2015
சென்னை:ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் (அதிமுக) கடந்த 17ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
இதைத்தொடர்ந்து இந்த தொகுதியில் ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.
 
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யார் போட்டியிடுவார்? என்ற கேள்வி எழுந்தது.
 
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
 
இதுகுறித்து நடிகை குஷ்புவிடம் ‘தினத்தந்தி’ நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக நீங்கள் போட்டியிட போவதாக பரபரப்பாக பேசப்படுகிறதே? நீங்கள் போட்டியிடுகிறீர்களா?
 
பதில்:- அப்படி எதுவும் இல்லை.
 
கேள்வி:- கட்சியின் மேலிடம் உங்களை அந்த தொகுதியில் போட்டியிட சொன்னால் ஒருவேளை போட்டியிடுவீர்களா?
பதில்:- ஒருவேளை என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் தேர்தலில் போட்டியிடவில்லை.
 
இவ்வாறு நடிகை குஷ்பு பதில் அளித்தார்.

33 நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்!

Thursday, May 28, 2015
33 நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
 
அவர்களில் 17 பேர் வெளிவிவகார சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள்.
ஏனையோர் வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என்று வெளிவிவகாரஅ மைச்ச தெரிவித்துள்ளது.
 
வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றி இருந்த அதன் பேச்சாளர் மகீசினி கொலொன்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை அண்மையில் நைஜீரிய தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கையரை விடுவித்துக் கொள்வதற்காக தொடர்ந்து வெளிவிவகார அமைச்சு, நைஜீரிய வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
 
எனினும் மனிதாபிமான காரணங்களுக்காக இது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளிப்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிரியா பிரச்னைக்கு தீர்வுகாண ரஷ்யாவுடன் இங்கிலாந்து பேச்சு!

Thursday, May 28, 2015
லண்டன்: சிரியாவில் கடந்த 4 ஆண்டாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. சிரியாவில் கடந்த 4 ஆண்டாக அரசுக்கு எதிராக சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஆயுத போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது ஐஎஸ் என்ற அமைப்பின் கீழ் இந்த போராட்டம் முன்னின்று நடத்தப்பட்டு வருகிறது. ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிக் அரசை நிறுவியுள்ளனர். அண்மைக்காலமாக இவர்களது கை ஓங்கி வருகிறது. ஈராக்கில் ரமாடி நகரையும், சிரியாவில் பாமிரா நகரையும் கடந்த வாரம் ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். பாமிரா நகரை மீண்டும் கைப்பற்ற சிரியா போர் விமானங்கள் நகரில் உள்ள ஐஎஸ் முகாம்கள் மீது கடந்த சில நாட்களாக குண்டு மழை பெய்து வருகின்றன. இதனால் பாமிராவில் உள்ள புராதன சின்னங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
சிரியா அரசுக்கு ரஷ்யா ஆயுத உதவியும் நிதி உதவியும் அளித்து வருகிறது. இதற்கு இங்கிலாந்து உள்பட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சிரியா பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக ரஷ்யாவுடன் இங்கிலாந்து அரசு கடந்த காலங்களில் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் அண்மையில் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் கேமரூன் அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் ஆனார். இவருக்கு ரஷய் அதிபர் புடின் நேற்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு தலைவர்களும் சிரியா, ஈரான் மற்றும் உக்ரைன் பிரச்னை குறித்து விவாதித்தனர்.
 
இது குறித்து இங்கிலாந்து பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: சிரியா பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இரண்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர். ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக ரஷ்யாவும், இங்கிலாந்தும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் பிரச்னையில் கடந்த பிப்ரவரி மாதம் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை தீவிரமாக அமல்படுத்த இரு நாடுகளும் முயற்சிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 27, 2015

நடுவானில் செயலிழந்த விமானத்தின் என்ஜின்கள்: விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய 182 பயணிகள்!

Wednesday, May 27, 2015
சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் இரு என்ஜின்களும் தற்காலிகமாக செயலிழந்தது. எனினும் விமானியின் சாமர்த்தியமான செயல்பாட்டால் பயணிகள் அனைவரும் பத்திரமாக ஷாங்காய் வந்து சேர்ந்தனர்.

ஏர் பஸ் ஏ.330-300 என்ற அந்த விமானம் கடந்த சனிக்கிழமையன்று சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது. ஏறத்தாழ 3.5 மணி நேரம் வானில் பயணித்த நிலையில், மோசமான வானிலை காரணமாக திடீரென விமானத்தின் இரு என்ஜின்களும் மின்சக்தியை இழந்தன. அப்போது விமானம் 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. எனினும் செயல்பாட்டு வழிமுறைகளை திறமையாக கையாண்ட விமானி, விரைவில் இரு என்ஜின்களையும் வழக்கமான செயல்பாட்டுக்கு கொண்டுவந்தார்.

இதனால் 182 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இரவு 10.56 மணியளவில் எவ்வித ஆபத்தும் இல்லாமல் ஷாங்காய் நகரில் தரையிறங்கினர். பின்னர் இரு என்ஜின்களும் தொடர்ந்து சோதனையிடப்பட்டன. எனினும் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் என்ஜின் நல்ல முறையில் இயங்கியது தெரியவந்தது.

20வது திருத்தம் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்!

Wednesday, May 27, 2015
புதிய தேர்தல் முறைமை உள்ளடக்கப்பட்ட 20 வது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்படவுள்ளது.

உத்தேச புதிய தேர்தல் முறை மாற்றத்தின் போது தெரிவு செய்யப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகள் நேற்று தீர்மானங்களை இறுதி செய்யவில்லை.

புதிய தேர்தல் முறையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 ஆகவோ அல்லது 255 ஆக தெரிவு செய்யவேண்டும் என இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இன்றைய கூட்டத்தில் இறுதி தீர்மானம் எட்டப்படும் பட்சத்தில் விரைவில் 20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
 
 
கால தாமதமின்றி 20 திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்புக்களும் அரசியல் சாசன திருத்தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றின் சட்டவிளக்கத்தை பெற்றுக்கொள்ள உத்தேச சட்டத்தை அனுப்பி வைத்து தேவையான திருத்தங்களை செய்து, பாராளுமன்றில் சட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

விருப்பு வாக்கு முறைமையை இல்லாமல் செய்து புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்ய ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வாக்குறுதிகளில் 20ம் தீருத்தச் சட்ட அமுலாக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதனை காலம் தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
                       

நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேவை என்ற மக்கள் நிலைப்பாடு உருவாகியுள்ளது!

Wednesday, May 27, 2015
நல்லாட்சி அரசாங்கம் தனது 150 வது நாளை பூர்த்தி செய்யும் தருணத்தில் நாட்டிற்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேவை என்ற மக்கள் நிலைப்பாடு உருவாகியுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
 
அளுத்கம நகர சபை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மாத்தறையில் அடுத்த மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
 
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து 150 நாட்கள் நெருங்கும் தருணத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டுக்கு மீண்டும் தேவை என்ற மக்கள் நிலைப்பாடு உருவாகியுள்ளதுடன் அது பெரும் மக்கள் அலையாக மாறி வருகிறது என பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
 
அதேவேளை அங்கு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர போராட்டங்களை நடத்தும் போது, அரசாங்கம் இந்த போராட்டத்தின் கூர்மையை இல்லாமல் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
அரசாங்கம் எங்களை சிறைகளில் தள்ள முயற்சித்து வருகிறது. அடுத்தடுத்து 100 சிறைகளில் எம்மை தள்ளினாலும் மகிந்தவை பிரதமராக்க வேண்டும் என்ற எமது போராட்டத்தை இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறுத்த முடியாது எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்....
 
எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில்  நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக   சீன செய்தி நிறுவனமான ´சின்ஹூவா´  தகவல்  வெளியிட்டுள்ளது.
 
எதிர்க்கட்சியைச் சேர்ந்த- தனது பெயரை வெளியிட விரும்பாத முக்கிய பிரமுகர் ஒருவரை மேற்கோள்காட்டி ´சின்ஹூவா´ இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
தமக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே வாராந்த கலந்துதுரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.
ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் குறித்து இந்தக் கூட்டங்களில் கலந்துரையாடப்படுகிறது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ நிழல் அமைச்சரவை ஒன்றை அமைத்து வாராந்தம் கூட்டங்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியிருப்பதாகவும்  ´சின்ஹூவா´ செய்தி சேவை  சுட்டிக்காட்டியுள்ளது.
 
கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்  மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார்.  இதனையடுத்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில்  அரசியல் காய்நகர்த்தும் செயற்பாட்டில்  மஹிந்த தரப்பு ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ரணில் விக்ரமசிங்க 2001 – 2004 ஆண்டு வரை பிரதமராக செயற்பட்ட போது அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில்: பந்துல குணவர்தன தகவல்!

Wednesday, May 27, 2015
ரணில் விக்ரமசிங்க 2001 – 2004 ஆண்டு வரை பிரதமராக செயற்பட்ட போது அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தகவல் வெளியிட்டுள்ளார்.
 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைத்தால், நான் இக்கொடுக்கல் வாங்கல் குறித்து முழுமையான தகவல்களையும் வெளிப்படுத்துவேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அவ் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ரகசிய ஆவணங்கள் பல தன்னிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
2001 – 2004 ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் புலிகளுக்கு பணம் கொடுத்தமை மற்றும் ஆயுதங்கள் கொடுத்தமை உட்பட மிக முக்கிய பல்வேறு ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தன்னை பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைத்தால் அதனை முற்றிலும் அம்பலப்படுத்துவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உடனடி ஆட்சிமாற்றம் தேவை : மன்னிப்புக்கோர மாட்டேன்: முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, May 27, 2015
நாட்டில் உட­ன­டி­யாக அர­சியல் மாற்றம் தேவை. அதற்­கான போராட்­டத்­திற்கு அணி திரள்வோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ அறை­கூவல் விடுத்தார்.
 
சீனாவின் துறை­முக நகரத் திட்­டத்தை எதிர்த்த அர­சாங்கம் இன்று அத்­திட்­டத்தை மீண்டும் ஆரம்­பிக்கப் போகின்­றது. இது தான் வேடிக்கை என்றும் முன்னாள் ஜனா­தி­பதி குறிப்பிட்டார். கொழும்பு நார­ஹேன்­பிட்டி அபே­ராம விகா­ரையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இரு வேறு மக்கள் சந்­திப்­புக்­களில் கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இவ்­வாறு தெரி­வித்தார்.
 
இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
 
இன்­றைய அர­சாங்கம் எமது ஆத­ர­வா­ளர்­க­ளையும் முன்னாள் அமைச்­சர்­க­ளையும் பழி­வாங்­கு­வது எப்­படி? சிறையில் அடைப்­பது எப்­படி? என்ற சிந்­த­னை­யோடு தான் 24 மணி­நே­ரமும் செயல்­ப­டு­கி­றது.
 
எனவே நாட்டின் அபி­வி­ருத்தி பொரு­ளா­தா­ரத்தில் கவனம் செலுத்­து­வ­தில்லை. அபி­வி­ருத்­திகள் பின்­ன­டைவைக் கண்­டுள்­ளன.பொரு­ளா­தாரம் வீழ்ச்சி கண்­டுள்­ளது. அன்று கண­வனும் மனை­வியும் ஒரே பஸ்ஸில் ரயிலில் பயணம் செய்ய முடி­யாத யுகம் காணப்­பட்­டது. பிள்­ளை­களை பாட­சா­லைக்கு அனுப்பி விட்டு அச்­சத்­துடன் வாழும் நிலை காணப்­பட்­டது.
 
புலி பயங்­க­ர­வாத யுகத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்தோம். பயங்­க­ர­வா­தத்தை ஒழித்தோம். தமிழ் மக்­க­ளுக்கோ அல்­லது வேறெந்த இனத்­துக்கு எதி­ராக நாம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை. பயங்­க­ர­வா­தத்­திற்கும் எதி­ரா­கவே செயற்­பட்டோம். நாட்டை மீட்­டெ­டுத்தோம்.
 
ஆனால் இன்று அனைத்தும் தலை­கீ­ழாக மாறி­விட்­டது. ஐரோப்­பிய நாடு­களின் நிபந்­த­னை­க­ளுக்கு நாம் அடி­ப­ணி­ய­வில்லை. இன்று ஐரோப்­பிய நாடு­களின் அடி­வ­ரு­டிகள் அதி­க­ரித்து விட்­டன. சீனாவின் துறை­முக நகரத் திட்­டத்தில் பாரிய ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­ற­தாக இந்த அரசின் அமைச்­ச­ரொ­ருவர் விமர்­சித்தார்.
 
ஆனால் இன்று அதே அமைச்சர் அப்­ப­டி­யொரு ஊழல் மோச­டி­களும் அத்­திட்­டத்தில் இடம்­பெ­ற­வில்லை. அதனை மீள ஆரம்­பிப்போம் என்­கிறார். இது தான் வேடிக்­கை­யாக இருக்­கின்­றது. பொலி­ஸாரால் சுயா­தீ­ன­மாக இயங்க முடி­ய­வில்லை. பிர­தமர் தலை­மை­யி­லான குழு­வி­னரே பொலி­ஸாரை இயக்­கு­கின்­றனர்.
 
இக்­கு­ழு­வினால் எமது ஆத­ர­வா­ளர்கள் முன்னாள் அமைச்­சர்கள் நண்­பர்கள் உற­வி­னர்கள் பிள்­ளைகள் கைது செய்யப்படுகின்றார்கள். சிறையில்
 
அடைக்கப்படுகின்றனர். இதனைத் தவிர இவ் அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.. எனவே நாட்டில் அரசியல் மாற்றம் தேவை. அதற்காக தயாராவோம் என்றார்

ஜூன் 27-ல் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு! ஜெ. போட்டியிடுகிறார்!!

Wednesday, May 27, 2015
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஜூன் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார். ஜூன் 30ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
 
வேட்பு மனு தாக்கல் ஜூன் 3ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 10 மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள். ஜூன் 11 மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஜூன் 13 மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.
 
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tuesday, May 26, 2015

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் புலிகளை நினைவுகூர்ந்தணர்: ஞானசார தேரர்!


Tuesday, May 26, 2015      
தடையுத்தரவு இருக்கும் தறுவாயில் கூட வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் விளக்கேற்றி விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்
 
இன்றைய தினம் ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலையாகி  வெளியே வந்தபோது அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
 
தற்போது நாட்டிலுள்ள நல்லாட்சிக்கு அமையே நான் நீதிமன்றில் முன்னிலையானேன். ஜப்பான் சென்றிருந்ததால் உரிய நேரத்தில் நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை. எனினும், நல்லாட்சியிலுள்ள சட்டத்தை நாம் மதிக்கின்றோம்.
எனினும், தற்போது வடக்கில் ஒரு சட்டமும், தெற்கில் ஒரு சட்டமும் இருக்கிறது.
 
அமைச்சர் ரிஷாட் பதியூதீன் 100 கணக்கான ஏக்கர் காணிகளை அழித்து வருகிறார். அவருக்கெதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
வடக்கில் தடையுத்தரவை மீறி வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் விளக்கேற்றி  புலிகளை நினைவுகூர்ந்தனர். இதற்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
 
எனவே தற்போது தெற்கில் ஒரு சட்டமும், தெற்கில் ஒரு சட்டமும் காணப்படுகிறது. எனினும், இந்த அரசாங்கம் அனைத்து இடங்களிலும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வரையில் பார்த்துக் கொண்டிருப்போம்  என்று குறிப்பிட்டார்.
 
நீதிமன்ற தடையுத்தரவை மீறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குற்றத்திற்காக ஞானசார தேரர் உள்ளிட்ட 27 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
 
எனினும், ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. ஜப்பான் சென்றிருந்த நிலையில் நாடு திரும்பிய ஞானசார தேரர் கறுவாத்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
 
கொழும்பு பிரதான நீதவான் பிணை வழங்கியதை அடுத்து ஞானசார தேரர் வெளியே வந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Tuesday, May 26, 2015      
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக சீன ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதனை உறுதி செய்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ வாராந்த அடிப்படையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டங்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் எந்தக் கட்சியில் போட்டியிடுவார் என்பது பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் மறுபுறத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இரகசிய பேச்சுவார்த்தை!

Tuesday, May 26, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர வைக்கவென இரவு பகலாக குரல் கொடுத்து வரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் மறுபுறத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முன்னாள் ஊடக மற்றும் வெளிவிவகார அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
 
அண்மையில் நண்பர் ஒருவரின் வீட்டில் பிரதமரை சந்தித்த கெஹலிய தன்னை மீண்டும் ஐதேகவில் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். அரச சொத்து சேதம் தொடர்பில் அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு காரணமாக அவர் இந்த முடிவில் இறங்கியுள்ளார். 'ஐயோ சேர், அது பொய் வழக்கு என்னை கட்சிக்குள் இணைத்து வழக்கை சமாளித்து விடுங்கள். நான் கண்டி மாவட்டத்தை கைக்கு மேல் வெற்றிபெறச் செய்கிறேன்' என்று கேட்டுள்ளார். ஆனால் பிரதமர் அதற்கு பதில் அளிக்கவில்லை.
 
இந்த சந்திப்பில் கெஹலியவுடன் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் கலந்து கொண்டார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்பதால் தங்களை ஐதேகவில் இணைத்து வேட்பு மனு அளிக்குமாறு பிரதமரிடம் கேட்டுள்ளனர்.தான் உள்ளிட்ட குடும்பத்தில் அனைவரும் உண்மையான ஐதேக ஆதரவாளர்கள் என்பதால் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு அளித்து மீண்டும் இணைத்துக் கொள்ளுமாறும் தேசிய பட்டிலில் இடம் அளிக்குமாறும் ஜீ.எல்.பீரிஸ் கோரியுள்ளார்.இந்த கோரிக்கைகளுக்கு பிரதமர் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

பெரும்பான்மை பலமுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் அரசாங்கத்தை கையளிக்குமாறு கோரியுள்ளனர்: முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன!

Tuesday, May 26, 2015
பெரும்பான்மை பலமுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் அரசாங்கத்தை கையளிக்குமாறு கோரி முன்னணியின் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கோரியுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் தமது ஏகமனதான தீர்மானத்தை ஜனாதிபதிக்கு கடித மூலம் அனுப்பியுள்ளதாக முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
 
பெரும்பான்மை பலத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமைத்து பிரதமரையும் தெரிவு செய்த பின் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்த வழிவகை மேற்கொள்ளுமாறும் அவர்கள் ஜனாதிபதியைக் கோரியுள்ளனர்.
நேற்றைய தினம் கொழும்பு அபயராமவில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் தெரி வித்தார்.
 
பிரதமரை நியமிப் பதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி க்குள் எந்தவித சிக்கல்களும் கிடை யாது என்பதையும் நாம் ஜனாதிபதி க்குத் தெரிவித்துள் ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அரசாங்கத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னியிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தயார் என்றால் பிரதமர் யார் என்று அறிவிக்க நாம் தயார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமரே ஆட்சியிலிருந்ததாகக் குறிப்பிட்ட தினேஸ் குணவர்த்தன, அந்த பிரதமரை விலக்கி விட்டு அரசியமைப்புக்கு மாறாக பலமில்லாத பிரதமர் ஒருவரை எவ்வாறு நியமிக்க முடியும்?என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் உட்பட முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலரும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

சொத்து மதிப்பு குறைத்து மதிப்பீடு: ஜெயலலிதா விடுதலை குறித்து பரபரப்பு தகவல்!

Tuesday, May 26, 2015
சென்னை: காவலாளிகள் வசிக்கும் ஷெட்டுக்கும், ஜெயலலிதாவின் பல்வேறு வகையான சொத்துக்களும், ஒரே மாதிரியான ரேட் ஃபிக்ஸ் செய்ததன் விளைவாக அவரின் சொத்து மதிப்பு குறைத்து காண்பிக்கப்பட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தால், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர் மீண்டும் தமிழக முதல்வராகியுள்ளார்.
 
ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் கூட்டல் பிழை இருப்பதாக சிறப்பு வக்கீல் ஆச்சாரியா உள்ளிட்டோர் சுட்டிக் காட்டிய நிலையில், மற்றொரு முக்கிய அம்சத்தை என்.டி.டி.வி செய்தி நிறுவனம் கண்டறிந்து வெளியிட்டுள்ளது.
 
அதாவது ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சென்னை, ஹைதராபாத்திலுள்ள சொத்துக்கள் அனைத்துக்குமே, ஒரு சதுர அடிக்கு ரூ.250 என்ற ஒரே மதிப்பை நிர்ணயித்து நீதி வழங்கப்பட்டுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆனால், வழக்கில் பொதுப்பணித்துறை போட பரிந்துரைத்த மதிப்பு சதுர அடிக்கு ரூ.310 ஆகும். பொதுவாக பொதுப்பணித்துறை உண்மையான மார்க்கெட் நிலவரத்தைவிட சொத்துக்களை குறைத்தே மதிப்பிடும். ஆனால் அந்த பொதுப்பணித்துறை பரிந்துரையைவிடவும், தீர்ப்பில் சொத்து மதிப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
 
என்.டி.டி.வி செய்தி நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது: ஒரு சதுர அடியின் மதிப்பு ரூ.250 என்று எப்படி நீதிபதி முடிவு செய்தார் என்று பார்த்தால், தீர்ப்பின் 786வது பக்கத்தில் விடையுள்ளது.
சென்னையில், ஒரு ஷெட் கட்ட சராசரியாக ரூ.250 ஆகும் என்று பொதுப்பணித்துறை கூறியதை மேற்கோள்காட்டி இந்த மதி்ப்புக்கு வந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
 
சென்னையின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள ஜெயலலிதாவின் சொத்துக்கள் அத்தனைக்கும் ஒரே மதிப்பு எப்படி வரும். சசிகலாவின் சொத்துக்களுக்கும் அதே மதிப்புதான் போடப்பட்டுள்ளது. இதில் ஹைதராபாத்திலுள்ள ஒரு சொத்தும் அடங்கும். அந்த சொத்துக்கும் இதே ரேட்தான்.
 
அதாவது, பண்ணை வீடு, பங்களா, அப்பார்ட்மென்ட் என அனைத்துக்கும் போடப்பட்டுள்ள மதிப்பு, சதுர அடிக்கு ரூ.250 மட்டுமே. இதன்மூலம் ரூ.27 கோடிக்கு காண்பிக்கப்பட்டிருந்த சொத்து மதிப்பு ரூ.5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சொத்து வித்தியாசம், வழக்கில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
 
நாங்கள் (என்.டி.டி.வி), இரு இடங்களை விசிட் செய்து உண்மையை அறிய முயன்றோம். அதில் ஒன்று, தென் சென்னையின் தொழில்பேட்டையில் அமைந்திருந்த பிரிண்டிங் பிரஸ். மற்றொன்று, மத்திய சென்னையின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள கமர்சியல் காம்ப்ளக்ஸ்.
 
பி.வி.ஆச்சாரியாவிடம் கேட்டபோது "ஒரு ஷெட்டுக்கான மதிப்பை, எப்படி அனைத்து சொத்துக்களுக்கும் பொருத்தி பார்க்க முடியும்" என்று கேள்வி எழுப்பினார். இவ்வாறு என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியும், இந்த கட்டுரையை தனது டிவிட்டர் தளத்தில் சுட்டிக் காட்டி, ஜெயலலிதா, உங்கள் ராஜினாமா கடிதத்தை தயார் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

Friday, May 22, 2015

இந்த ஆட்சி வேண்டாம். நாம் விரைவில் ஆட்சியை மாற்றுவோம்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ!

Friday, May 22, 2015
முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று 2015.05.21ம் திகதி 04.30 மணிக்கு அம்பறை உஹன வீதியில் அமைந்துள்ள மஹாபாதி விகாரைக்கு விஜயம் செய்து மத வழி பாட்டில்  ஈடுபட்ட முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னாள்  கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீரதிஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.
 
அவர் அங்கு உரையாற்றுகையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ்கின்ற சூழலை நான் உருவாக்கியிருக்கின்றேன்;. பௌத்த பிக்குகள் 100க்கு  மேற்பட்டவர்கள் விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். காத்தான் குடி பள்ளி வாயலில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம் மக்கள் சுடப்பட்டனர்.
 
கிழக்கு மாகாணத்தில் இருந்து ஹஜ்ஜிக்கு சென்றவர்கள் விடுதலைப்புலிகளினால் சுடப்பட்டனர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்ட்டனர். இச் செயல்களை எல்லாம் இல்லாமல் செய்து நாட்டில் யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் நிம்மதியாகவும், சுபீட்சமாகவும் வாழ்கின்ற சூழ்நிலையை நானே உருவாக்கினேன்.
 
ஜனாதிபதியை மாற்ற வேண்டும் என மக்கள் வாக்களித்தோம் என்கின்றனர். ஆனால் இன்று மாறாக மாகாண சபையில் ஆட்சி மாற்றப்பட்டுள்ளது, பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளது, மக்களுக்கு பணி செய்த சமூர்த்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் பழிவாங்கப்படுகின்றனர், பாதுகாப்பு செயலாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர், அமைச்சர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், பருப்பு, சரக்கு போன்ற முக்கிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி வேண்டுமா? வேண்டாம்.
 
விரைவில் நாம் இந்த ஆட்சியை மாற்றி மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்ற சூழ்நிலை உருவாக்குவோம் மிக விரைவில் ஆட்சியை மாற்றுவோம் என தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சிறியானி விஜய விக்கிரமசிங்க, பியசேன, மாகாண சபை உறுப்பினர் வீரசிங்க, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ்(பெஷ்டர்) உட்பட    பிரதேச சபை முன்னாள்  தவிசாளர்கள், உறுப்பினர்கள், பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸார் உடனடியான கவனத்தை செலுத்த வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

Friday, May 22, 2015
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸார் உடனடியான கவனத்தை செலுத்த வேண்டும். இவ்வாறான சம்பவங்களின் அடிப்படையிலேயே பயங்கரவாதம் உருவாக முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்துக்கும் பொலிஸ் நிலையத்துக்கும் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.புலிகளின் ஆரம்பமும் இவ்வாறே அமைந்திருந்தது.
 
எனவே பொலிஸார் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நன்கு திட்டமிடப்பட்டவையாகும்.எனவே சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு தற்போதைய நிலை கட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்று மஹியங்கனையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மஹிந்த குறிப்பிட்டார்.

முதலமைச்சராகும் ஜெயலலிதா கடந்து வந்த பாதை!!

Friday, May 22, 2015
முதலமைச்சர் பதவியிலிருந்து பன்னீர் செல்வம் விலகியிருக்கும் நிலையில் ஆட்சி அமைக்க ஜெயலலிதாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இந்திய அரசியலில் முத்திரை பதித்த பெண்களில் ஒருவரான ஜெயலலிதா, கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலம் மைசூரில் ஜெயராம் - சந்தியா தம்பதியருக்கு 1948 பிப்ரவரி 24-ம் தேதி பிறந்தார் ஜெயலலிதா. அவரது மூதாதையர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். இளம் வயதிலேயே திரையுலகில் நுழைந்த ஜெயலிலதா, எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட அன்றைய முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

1982ம் ஆண்டு அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்ட அவர், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக உயர்ந்தார். 1984-ம் ஆண்டு ராஜ்யசபாவில் முதன் முதலில் அவர் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பேசும் திறன்கொண்டவர் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, தமிழக அரசியலில் கருணாநிதிக்கு மாற்றான அரசியல் சக்தியாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்.

1991ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்து தமிழக முதலமைச்சராக முதன் முறையாக பொறுப்பேற்றார். ஆனாலும், பல்வேறு புகார்களால் அடுத்து வந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. இதையடுத்து திமுகவின் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார்.

2002-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி தமிழக முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார். 2006-ல் ஆட்சியை இழந்தாலும், மக்களின் நம்பிக்கையை சம்பாதித்து 2011ம் ஆண்டு 3-வது முறையாக அவர் முதலமைச்சரானார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததால், முதலமைச்சர் பதவியை அவர் இழந்தார். தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த ஜெயலலிதா, கடந்த 11ம் தேதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
 
தமிழக முதலமைச்சராக இருந்த போது பெண்களின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்த ஜெயலலிதா, தொட்டில் குழந்தைத் திட்டம், மகளிர் காவல் நிலையம் போன்ற திட்டங்களை செயல்படுத்தினார். விளையாட்டுத்துறையின் மீது அவருக்கு தனிக் கவனம் உண்டு. அரசியல் பங்களிப்புக்காக பல்வேறு பல்கலைக் கழகங்கள் ஜெயலலிதாவுக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன.

பாதுகாப்பு அமைச்சில் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது!

Friday, May 22, 2015
பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற குடியரசு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு பிஎம்யூடி பஸ்நாயாக அவர்கள் கலந்து கொண்டார்.
 
1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த போதும் 1972 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் முலமே இலங்கையர்ளுக்கு சுயாட்சியுடன் கூடிய சுதந்திரம் கிடைத்த்து என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேசியக் கொடி பாதுகாப்புச் செயலாளர் அவர்களினால் ஏற்றி வைக்கப்பட்டதினைத் தொடர்ந்து பங்குபற்றிய அனைவர்களினாலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
 
இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. ஏபிஜி கீத்சிறி,மேலதிகச் செயலாளர்( நிர்வாகம்) திருமதி இந்து ரத்நாயக,இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Wednesday, May 20, 2015

புலிகள் இயக்கத்தை கொண்டாடும் வகையில் நிகழ்வுகளை முன்னெடுக்க இடமளியோம் அரசாங்கம்!

Wednesday, May 20, 2015
புலிகள் இயக்கத்தை கொண்டாடும் வகையில் நிகழ்வுகளை வடக்கில் முன்னெடுக்க இடமளியோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மே மாதம் 19 ஆம் திகதி இராணுவ கௌரவ தினமாகவே கொண்டாடப்படும் என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளது.
இதேவேளை- மே 18 ஆம் திகதி தொடக்கம் 14 நாட்களுக்கு எல்.டி.டி.ஈ அமைப்புக்கான கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது என முல்லைதீவு நீதவான் தெரிவித்துள்ளார்.

Vardharaja Perumal Exclusive Interview! முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஜ பெருமாள் பிரத்தியேக பேட்டி!


யுத்தம் நிறைவடைந்து 06 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடக்கில் மீண்டும் புலிக்கொடிகள் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

Wednesday, May 20, 2015
யுத்தம் நிறைவடைந்து 06 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடக்கில் மீண்டும் புலிக்கொடிகள் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!
 
யுத்தம் நிறைவடைந்து 06 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடக்கில் மீண்டும் புலிக்கொடிகள் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
கம்புருபிட்டியவில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வொனறில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த ஆறு வடங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளை துப்பரவு செய்ய முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.
 
அன்று இராணுவத்தினர் தன் உயிர், உடல் உறுப்புக்களை தியாகம் செய்தமைக்கு காரணம் நாட்டை காப்பாற்றுவதற்காவே, எனினும் இன்று சிலர் அதனை மறந்து விட்டதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். கச்சேரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

Wednesday, May 20, 2015
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கோரப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்னால் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலையில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாண ஆசிரிய மாணவ சமூகத்தினர், கல்வியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் என்று பலரும் பங்கேற்று வருகின்றனர்.