Friday, May 22, 2015

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸார் உடனடியான கவனத்தை செலுத்த வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

Friday, May 22, 2015
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸார் உடனடியான கவனத்தை செலுத்த வேண்டும். இவ்வாறான சம்பவங்களின் அடிப்படையிலேயே பயங்கரவாதம் உருவாக முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்துக்கும் பொலிஸ் நிலையத்துக்கும் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.புலிகளின் ஆரம்பமும் இவ்வாறே அமைந்திருந்தது.
 
எனவே பொலிஸார் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நன்கு திட்டமிடப்பட்டவையாகும்.எனவே சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு தற்போதைய நிலை கட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்று மஹியங்கனையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மஹிந்த குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment