Friday, May 22, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று 2015.05.21ம் திகதி 04.30 மணிக்கு அம்பறை உஹன வீதியில் அமைந்துள்ள மஹாபாதி விகாரைக்கு விஜயம் செய்து மத வழி பாட்டில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீரதிஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.
அவர் அங்கு உரையாற்றுகையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ்கின்ற சூழலை நான் உருவாக்கியிருக்கின்றேன்;. பௌத்த பிக்குகள் 100க்கு மேற்பட்டவர்கள் விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். காத்தான் குடி பள்ளி வாயலில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம் மக்கள் சுடப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்தில் இருந்து ஹஜ்ஜிக்கு சென்றவர்கள் விடுதலைப்புலிகளினால் சுடப்பட்டனர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்ட்டனர். இச் செயல்களை எல்லாம் இல்லாமல் செய்து நாட்டில் யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் நிம்மதியாகவும், சுபீட்சமாகவும் வாழ்கின்ற சூழ்நிலையை நானே உருவாக்கினேன்.
ஜனாதிபதியை மாற்ற வேண்டும் என மக்கள் வாக்களித்தோம் என்கின்றனர். ஆனால் இன்று மாறாக மாகாண சபையில் ஆட்சி மாற்றப்பட்டுள்ளது, பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளது, மக்களுக்கு பணி செய்த சமூர்த்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் பழிவாங்கப்படுகின்றனர், பாதுகாப்பு செயலாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர், அமைச்சர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், பருப்பு, சரக்கு போன்ற முக்கிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி வேண்டுமா? வேண்டாம்.
விரைவில் நாம் இந்த ஆட்சியை மாற்றி மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்ற சூழ்நிலை உருவாக்குவோம் மிக விரைவில் ஆட்சியை மாற்றுவோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சிறியானி விஜய விக்கிரமசிங்க, பியசேன, மாகாண சபை உறுப்பினர் வீரசிங்க, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ்(பெஷ்டர்) உட்பட பிரதேச சபை முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment