Wednesday, May 27, 2015
ரணில் விக்ரமசிங்க 2001 – 2004 ஆண்டு வரை பிரதமராக செயற்பட்ட போது அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தகவல் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைத்தால், நான் இக்கொடுக்கல் வாங்கல் குறித்து முழுமையான தகவல்களையும் வெளிப்படுத்துவேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ரகசிய ஆவணங்கள் பல தன்னிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2001 – 2004 ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் புலிகளுக்கு பணம் கொடுத்தமை மற்றும் ஆயுதங்கள் கொடுத்தமை உட்பட மிக முக்கிய பல்வேறு ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தன்னை பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைத்தால் அதனை முற்றிலும் அம்பலப்படுத்துவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment