Wednesday, May 27, 2015
நாட்டில் உடனடியாக அரசியல் மாற்றம் தேவை. அதற்கான போராட்டத்திற்கு அணி திரள்வோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறைகூவல் விடுத்தார்.
நாட்டில் உடனடியாக அரசியல் மாற்றம் தேவை. அதற்கான போராட்டத்திற்கு அணி திரள்வோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறைகூவல் விடுத்தார்.
சீனாவின் துறைமுக நகரத் திட்டத்தை எதிர்த்த அரசாங்கம் இன்று அத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போகின்றது. இது தான் வேடிக்கை என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார். கொழும்பு நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இரு வேறு மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இன்றைய அரசாங்கம் எமது ஆதரவாளர்களையும் முன்னாள் அமைச்சர்களையும் பழிவாங்குவது எப்படி? சிறையில் அடைப்பது எப்படி? என்ற சிந்தனையோடு தான் 24 மணிநேரமும் செயல்படுகிறது.
எனவே நாட்டின் அபிவிருத்தி பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதில்லை. அபிவிருத்திகள் பின்னடைவைக் கண்டுள்ளன.பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. அன்று கணவனும் மனைவியும் ஒரே பஸ்ஸில் ரயிலில் பயணம் செய்ய முடியாத யுகம் காணப்பட்டது. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி விட்டு அச்சத்துடன் வாழும் நிலை காணப்பட்டது.
புலி பயங்கரவாத யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தோம். பயங்கரவாதத்தை ஒழித்தோம். தமிழ் மக்களுக்கோ அல்லது வேறெந்த இனத்துக்கு எதிராக நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பயங்கரவாதத்திற்கும் எதிராகவே செயற்பட்டோம். நாட்டை மீட்டெடுத்தோம்.
ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. ஐரோப்பிய நாடுகளின் நிபந்தனைகளுக்கு நாம் அடிபணியவில்லை. இன்று ஐரோப்பிய நாடுகளின் அடிவருடிகள் அதிகரித்து விட்டன. சீனாவின் துறைமுக நகரத் திட்டத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக இந்த அரசின் அமைச்சரொருவர் விமர்சித்தார்.
ஆனால் இன்று அதே அமைச்சர் அப்படியொரு ஊழல் மோசடிகளும் அத்திட்டத்தில் இடம்பெறவில்லை. அதனை மீள ஆரம்பிப்போம் என்கிறார். இது தான் வேடிக்கையாக இருக்கின்றது. பொலிஸாரால் சுயாதீனமாக இயங்க முடியவில்லை. பிரதமர் தலைமையிலான குழுவினரே பொலிஸாரை இயக்குகின்றனர்.
இக்குழுவினால் எமது ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் நண்பர்கள் உறவினர்கள் பிள்ளைகள் கைது செய்யப்படுகின்றார்கள். சிறையில்
அடைக்கப்படுகின்றனர். இதனைத் தவிர இவ் அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.. எனவே நாட்டில் அரசியல் மாற்றம் தேவை. அதற்காக தயாராவோம் என்றார்
No comments:
Post a Comment