Wednesday, May 27, 2015
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஜூன் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார். ஜூன் 30ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வேட்பு மனு தாக்கல் ஜூன் 3ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 10 மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள். ஜூன் 11 மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஜூன் 13 மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment