Thursday, May 28, 2015
வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் கும்பல்கள் குறித்து கொழும்பு கட்டுநாயாக்க விமானநிலைய ஊழியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட கும்பல் இந்திய பெண்களை சுற்றுலாப்பயணிகள் போன்று இலங்கைக்க அழைத்து வந்து பின்னர் அவர்களை வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசாங்கம் தங்கள் நாட்டுப்பெண்கள் மத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்வதை தடைசெய்துள்ளதால்,இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் சில இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து அவர்கள் சிறிய குழுக்களாக சுற்றுலாப்பயணிகள் போல வருகின்றனர். இதன் பின்னரே இரகசிய, சட்டவிரோத நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன, அவர்களுக்கு உதவுவதற்கு என குறிப்பிட்ட சில நபர்கள் விமானநிலையத்தில் உள்ளனர்,அவர்கள் அவர்களுக்கு உதவி வழங்கி மத்தியகிழக்கிற்கு உடனடியாக அனுப்பிவைக்கின்றனர், என விமான நிலைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment