Thursday, May 28, 2015

20ம் திருத்தங்களுக்கு இடமளித்து, தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, May 28, 2015
மேலும் திருத்தங்களை மேற்கொள்ள இடமளித்து 20ம் திருத்தச் சட்டமான தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவையின் முதல்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தேர்தல் முறைமை சீர்த்திருத்தம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள்உள்ளிட்ட பல கட்சிகள் தங்களின் யோசனைகளை கடந்த வாரம் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தன.

பின்னர் இது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

நேற்றையதினம் இடம்பெற்றிருந்த அமைச்சரவை கூட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் பி.திகாம்பரம் ஆகியோரால் புதிய பல யோசனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த யோசனைகளையும் உள்ளடக்கும் விதத்தில் மேலும் சீர்த்திருத்தங்களுக்கு இடமளிக்கும் வகையில் குறித்த சீர்த்திருத்தச் சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
            

No comments:

Post a Comment