Friday, May 29, 2015
ஜெனீவா:ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடான நைஜீரியா, போகோ ஹரம்
தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி பெரும் இன்னலுற்று வருகிறது. சாட், நைஜர்
மற்றும் கேமரூன் நாடுகளிலும் இந்த தீவிரவாதிகள் காலூன்றி இருந்தாலும்,
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியை தங்கள் ஆதிக்க பூமியாக கொண்டு உள்ளனர்.
நைஜீரியாவின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி வரும் இவர்கள், தங்கள் தீவிரவாத பணிகளுக்காக (புலிகளின் பானில்) பெண்கள், குழந்தைகளை அடிக்கடி கடத்திச்செல்லும் நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் போர்னோ மாநிலத்தின் சிபோக் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கூட 200 பெண் குழந்தைகளை கடத்திச்சென்றது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குழந்தைகளை மீட்க முடியாமல் நைஜீரிய ராணுவமும், பாதுகாப்பு படையினரும் திணறி வருகின்றனர்.
இந்த தீவிரவாதிகளின் முகாம்கள் மீது கடந்த மாதம் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட சுமார் 300 பேர் மீட்கப்பட்டனர். எனினும் சிபோக் பள்ளிக்குழந்தைகளை இன்னும் மீட்க முடியவில்லை.
இந்த நிலையில் போகோ ஹரம் தீவிரவாதிகள் குழந்தைகள் மற்றும் பெண்களை தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயன்படுத்தி வருவதாகவும், இப்படிப்பட்ட தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருவதாகவும் ஐ.நா. அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.
யுனிசெப் எனப்படும் ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் சிறப்பு உறுப்பினர் லாரென்ட் கூறுகையில், ‘நைஜீரியாவில் கடந்த ஆண்டு 26 தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த ஆண்டு இன்னும் 6 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் 27 தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலான தாக்குதல்களில் ஈடுபட்டது குழந்தைகளும், பெண்களுமே’ என்று தெரிவித்தார்.
குழந்தைகள் மற்றும் பெண்களை வேண்டுமென்றே அச்சுறுத்தி இந்த தாக்குதல்களில் ஈடுபடுத்தி வருவதாக யுனிசெப்பின் நைஜீரியாவுக்கான தூதர் ஜீன் காவ் கூறியுள்ளார்.
பெண்களால் மிகவும் எளிதாக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை தங்கள் ஆடைகளுக்குள் மறைத்து கொண்டு செல்ல முடியும் என்பதால், இப்படிப்பட்ட தாக்குதல்களால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் முகமது புகாரி வெற்றி பெற்றார். நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் போட்டியிட்ட அவருக்கு, கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பெருவாரியாக வாக்களித்தனர்.
நைஜீரியாவின் புதிய அதிபராக முகமது புகாரி இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்கும் நிலையில், அங்கு போகோ ஹரம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுமா? என அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் ஆவலோடு எதிர்பார்க்கின்றன.

No comments:
Post a Comment