Friday, May 29, 2015

யாழ்ப்பாண நீதிமன்ற தாக்குதல் மாணவர்களை சந்தித்தது (புலி)கூட்டமைப்பு!

Friday, May 29, 2015      
யாழ்ப்பாண நீதிமன்ற தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் குழு ஒன்று நேற்று சந்தித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 37 மாணவர்கள் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் குறித்த முழுமையான விபரங்கள் இன்று உரிய தரப்பினருக்கு வழங்கப்படும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அவர்களை விடுவிக்க முயற்சிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் சென்றிருந்த சமயம், குறித்த மாணவர்களை விடுவிப்பது தொடர்பாக வடமாகாண முதலமைச்சரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
            

No comments:

Post a Comment