Thursday, May 28, 2015
33 நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
அவர்களில் 17 பேர் வெளிவிவகார சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள்.
ஏனையோர் வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என்று வெளிவிவகாரஅ மைச்ச தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றி இருந்த அதன் பேச்சாளர் மகீசினி கொலொன்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் நைஜீரிய தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கையரை விடுவித்துக் கொள்வதற்காக தொடர்ந்து வெளிவிவகார அமைச்சு, நைஜீரிய வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் மனிதாபிமான காரணங்களுக்காக இது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளிப்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment