Thursday, May 28, 2015
சென்னை:ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் (அதிமுக) கடந்த 17ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து இந்த தொகுதியில் ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யார் போட்டியிடுவார்? என்ற கேள்வி எழுந்தது.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுகுறித்து நடிகை குஷ்புவிடம் ‘தினத்தந்தி’ நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக நீங்கள் போட்டியிட போவதாக பரபரப்பாக பேசப்படுகிறதே? நீங்கள் போட்டியிடுகிறீர்களா?
பதில்:- அப்படி எதுவும் இல்லை.
கேள்வி:- கட்சியின் மேலிடம் உங்களை அந்த தொகுதியில் போட்டியிட சொன்னால் ஒருவேளை போட்டியிடுவீர்களா?
பதில்:- ஒருவேளை என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் தேர்தலில் போட்டியிடவில்லை.
இவ்வாறு நடிகை குஷ்பு பதில் அளித்தார்.
No comments:
Post a Comment