Friday, May 22, 2015
பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற குடியரசு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு பிஎம்யூடி பஸ்நாயாக அவர்கள் கலந்து கொண்டார்.
1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த போதும் 1972 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் முலமே இலங்கையர்ளுக்கு சுயாட்சியுடன் கூடிய சுதந்திரம் கிடைத்த்து என்பது குறிப்பிடத்தக்கது.
தேசியக் கொடி பாதுகாப்புச் செயலாளர் அவர்களினால் ஏற்றி வைக்கப்பட்டதினைத் தொடர்ந்து பங்குபற்றிய அனைவர்களினாலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. ஏபிஜி கீத்சிறி,மேலதிகச் செயலாளர்( நிர்வாகம்) திருமதி இந்து ரத்நாயக,இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment