Saturday, May 30, 2015

புலிகள் மீண்டும் தலைத்தூக்கிவிடுவார்கள்: முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ!

Saturday, May 30, 2015
புலிகள் மீண்டும் தலைத்தூக்கிவிடுவார்கள் என்ற கவலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அனுராதபுரம் ஜயசிறிமகாபோதியில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறியுள்ளார்.

தற்போதைய சூழல் தமக்கு இந்த கவலையை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலிகள் மீள ஒருங்கிணையக் கூடுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அச்சம் வெளியிட்டுள்ளார்.

புலிகள் மீளவும் நாட்டில் பயங்கரவாதத்தில் ஈடுபடக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீளவும் பயங்கரவாதம் தலைதூக்காது என நம்புவோமாக என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...


நாட்டின் ஆட்சியாளர் குரோத உணர்வில் செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வாரியபொல பௌத்த விஹாரை ஒன்றில் மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த காலங்களில் வழக்கு விசாரணைகளின் பின்னர் தண்டனை விதிக்கப்பட்டது என்ற போதிலும், தற்போது தண்டனை விதித்து அதன் பின்னர் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.


அண்மையில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னரே உயர் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த காலத்தில் நாட்டில் அபிவிருத்தி ஏற்பட்டதா இல்லையா என்பதனை மக்களே தீர்மானித்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றதா என்பதனை மக்களைப் போன்றே தானும் அவதானித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


ஆட்சியோர் குரோத உணர்வுடன் ஆட்சி நடத்தி வருவதாகவும், இது எதிர்கால சந்தத்தியினருக்கு பிழையான வழிகாட்டலாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பிரதமர் வேட்பாளராக மஹிந்தவை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதனைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியாளர் குரோத உணர்வுடன் செயற்படுவதாக நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment