Monday, August 31, 2015

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களே எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க வேண்டுமே தவிர ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க முடியாது: விமல் வீரவன்ச !

Monday, August 31, 2015
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களே எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க வேண்டுமே தவிர ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரை ஜனாதிபதி நியமனம் செய்தால் நாட்டின் பெரும்பாலான கட்சிகளின் ஜனநாயகம் சீர்குலையுமென்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமது கட்சிக்கு உரித்தானதென உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இப்பதவி வழங்கப்பட வேண்டுமென ஜே.வி.பி. தர்க்கம் புரிகிறது. இது தொடர்பாகவும் விசாரணை வேண்டுமென விமல் வீரவங்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை புதிய எதிர்க்கட்சிக் கூட்டமைப்பை உருவாக்க ஐ.ம.சு. முன்னணியுடன் தொடர்பான பல அரசியற் கட்சிகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. இவ்விடயமாக பல தரப்பினருடன் கருத்துப்பரிமாறல் நடத்தியதாக சமசமாஜக் கட்சித் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தெரிவித்தார்.மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்க் கட்சி கூட்டமைப்பை கட்டியெழுப்ப அவதானம் திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.தே.கவும், ஸ்ரீல.சு.கட்சியும் தேசிய அரசை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். இருந்தும் முன்னணியின் உறுப்பினர் கள் சிலர் எதிர்க்கட்சியில் அமர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

செப்டெம்பர் 01 ஆம் திகதி முதலாவது பாராளுமன்ற அமர்வில் இணைவாக எதிர்க் கட்சித் தலைவரை ஜனாதிபதி நியமிப் பாரெனத் தெரிகிறது.

Post titleசமல் ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக அல்லது அமைச்சராக நியமிக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை: மஹிந்த ராஜபக்ஷ!

Monday, August 31, 2015
சமல் ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக அல்லது அமைச்சராக நியமிக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாகவோ, அமைச்சுப் பதவி தொடர்பாகவோ யாரும் இதுவரை சமல் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவில்லை. அது தொடர்பான அனைத்து தகவல்களும் ஆதாரமற்றவை.

இது தொடர்பில் நான் சமல் ராஜபக்ஷவை தொடர்பு கொண்டு விசாரித்தேன். தனக்கு அவ்வாறான தகவல்களை யாரும் அறிவிக்கவில்லை என்று அவர் மறுத்துள்ளார். சுதந்திரக்கட்சியின் எதிர்காலம் பெரும் ஆபத்தை எதிர் கொண்டுள்ளது. என்ன நடக்கப் போகின்றது என்பதை நாங்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.
 
எமது கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக்குவதில் விருப்பம் கொண்டுள்ளனர். ஆனால் இது தொடர்பிலும் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லக்ஸ்மன் கதிர்காமர் மரணம் குறித்து விசாரிக்க கோரும் மகள்!

Monday, August 31, 2015
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மரணம் தொடர்பாக புதிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது குடும்பத்தினர் அரசாங்கத்தை கோரவுள்ளனர். முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் மகள் அஜிதா கதிர்காமர் இதனை தெரிவித்துள்ளார்.
 
தனது தந்தையின் மரணம் குறித்து புதியவிசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை தனது குடும்பத்தினர் கோரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தனது தந்தையின் மரணம் தொடர்பாக தனது குடும்பத்தினரின் மனங்களில் விடையில்லாத பல கேள்விகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
 
சகலவற்றிற்கும் புலிகளை குற்றம்சாட்டுவது இலகுவான விடயம்இஅவர்களிற்கு இதில் தொடர்பிருக்கலாம், ஆனால் இது வேறு எவராவது வழங்கிய உத்தரவின் பேரில் இடம்பெற்றிருக்கலாம்,கடந்த தசாப்தத்தில் இடம்பெற்ற பல சம்பவங்கள் குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறாதது போன்று இது குறித்தும் விசாரணைகள் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களது பூர்வீக நிலத்தை முன்னைய ஆட்சியாளர்கள் தங்கள்வசப்படுத்தியிருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
ட்டபூர்வ உரிமை குறித்த ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்ற நிலையில் அது கதிர்காமர் குடும்பத்தின் சொத்து என தாங்கள் அறிந்திருக்கவில்லை என எப்படி அவர்கள் குறிப்பிட முடியும்,எங்களிற்கு சொந்தமான நிலம் தற்போது ஜனாதிபதி மாளிகையாக மாற்றப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Sunday, August 30, 2015

புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளுக்கு எதிரான புலனாய்வு நடவடிக்கைகள்: இராணுவப் பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர!

Sunday, August 30, 2015
புலம்பெயர்ந்த புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளுக்கு எதிரான புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக  இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
இராணுவப் பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
 
புலம்பெயர்ந்த புலிகளுக்கு ஆதரவான தமிழ் அமைப்புகளை கண்காணிப்பதற்காக பல நாடுகளில் இராணுவ புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
அவர்கள் குறித்த விபரங்கள் புலம்பெயர்ந்த அமைப்பொன்றுக்கு கசிந்திருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
 
எனினும் இதனை அவர் மறுத்துள்ளார்.
 
தொடர்ந்து இராணுவ புலனாய்வாளர்கள் தடையின்றி தங்களின் புலனாய்வு பணிகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் எதிர்க்கட்சி தலைவரை தீர்மானிக்க முடியாது: விமல் வீரவன்ச!

Sunday, August 30, 2015
எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்ய வேண்டியது ஜனாதிபதி அல்ல பாராளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெறும்பான்மை விருப்பத்துடனேயே என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 
ஆனால் அதனை ஜனாதிபதியோ கட்சியின் தலைவரோ தீர்மானிக்க முடியாது. அதனை பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இன்றோ நடப்பது அனைத்தும் தலைகீழாக இருக்கின்றன.
 
நாட்டின் பிரதமரையும் ஜனாதிபதிதான் தேர்ந்தெடுக்கின்றார். அமைச்சரவையையும் அவர்தான் முடிவு செய்கின்றார். அதுவும் போதாதற்கு எதிர்க்கட்சித் தலைவரையும் அவர்தான் தீர்மானிக்க முயல்கின்றார். இது ஒரு அரசியல் கோமாளித்தனம். அத்துடன் இதன் மூலம் இலங்கையின் பல்கட்சி ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பு நசுக்கப்பட்டுவிடும்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளிக்கக் கோருபவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் டொலர் பொதிகளுக்கு ஆசைப்பட்டு குரல் கொடுக்கின்றார்கள். அது குறித்து தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் பதவி சுதந்திரக் கட்சிக்கே உரியது. ஆனால் அதனை தீர்மானிக்கும் சுதந்திரம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது செவ்வியில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய, தங்களுக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் : தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு!

Sunday, August 30, 2015
நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய, தங்களுக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த தேர்தலில் அதிகபடியான ஆசனங்களைப் பெற்ற இரண்டு கட்சிகள் கூட்டிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கின்றன.

தேசிய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஒரு அங்கம் ஆதலால், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் எதிர்கட்சியாக செயற்பட முடியது.

இவற்று அடுத்தபடியாக, இலங்கை தமிழரசு கட்சியே நாடாளுமன்றத்தில் அதகபடியாக 16 ஆசனங்களைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற சம்பிரதாயங்களின்படி இலங்கை தமிழரசு கட்சியின் குழுத் தலைவர் என்ற அடிப்படையில், இரா.சம்பந்தனுக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும்.

நாட்டில் அனைத்தின மக்களுக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ள நிலையில், இந்த விடயத்திலும் அந்த உறுதிமொழி நடைமு


றைப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி நாடாளுமன்றம் ஒன்று கூடும் போது, எதிர்கட்சித் தலைவர் யாரென்று அறிவிக்கப்பட வேண்டும்.

எனினும் இது குறித்து இன்னும் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த தினம் ஜனாதிபதியின் தலைமையில் ஒன்று கூடிய சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது, எதிர்கட்சித் தலைவர் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே வழங்கப்பட்டிருந்தது.

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற சிறிய கட்சிகள் எதிர்கட்சித் தலைவர் தொடர்பில் பல்வேறு நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன.

ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும் எதிர்கட்சித் தலைவரை தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதேநேரம் எதிர்கட்சித் தலைவர் பதவி என்பது நாடாளுமன்றத்தின் விவகாரம் என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ்குணவர்தன கூறியுள்ளார்.

அதற்கு முன்னதாக அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், யார் எதிர்கட்சித் தலைவராக இருந்தாலும், எதிர்கட்சிக்கான பொறுப்புக்கள் தங்களுக்கு இருப்பதாக ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்
.

எதிர்வரும் மூன்றாம் திகதி கிழக்கு வான் பரப்பில் விமானங்கள் பறப்பின் அச்சப்பட தேவையில்லை: இராணுவத்தின் பிரதான அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்!

Sunday, August 30, 2015
எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ள நீர்காகம் கூட்டுப் பயிற்சியின் போது கிழக்கு மாகாண வான்பரப்பில் விமானங்கள் பறக்கக்கூடும் என்றும் இதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லையென்று இலங்கை இராணுவத்தின் பிரதான அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நேற்று தெரிவித்தார்.
 
செப்டெம்பர் 3ஆம் திகதி நீர்காகம் கூட்டுப்பயிற்சி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 6ஆவது தடவையாக முப்படையினர் இணைந்து நடத்தும் இப்பயிற்சியானது இம்முறை கொக்கிளாய் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நடைபெறவுள்ளது.
 
பயிற்சி நடக்கவுள்ள பிரதேசங்களில் விமானங்கள் பறப்பதையிட்டு மக்கள் அச்சமடையத் ​தேவையில்லையென்றும் இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
'நீர்காகம் கூட்டுப் பயிற்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளது.
 
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 6ஆவது தடவையாக முப்படையினர் இணைந்து நடத்தும் இப்பயிற்சியானது இம்முறை கொக்கிளாய் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் முப்படைகளைச் சேர்ந்த 297 அதிகாரிகளும் 2232 வீரர்களும் ஈடுபடவுள்ளனர் என இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்தார்.
 
மேலும் அமெரிக்கா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, மலேசியா, மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 53 அதிகாரிகள் பங்குபற்றவுள்ளனர்.
இப்பயிற்சியின் இறுதிநாள் தாக்குதல் நடவடிக்கை ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரை பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
 
இந்த தாக்குதல் பயிற்சிகளுக்காக எம்.ஐ. 17, லெ் 212 ஹெலிகொப்டர்கள், ஏ.என். 32 விமானம் கபீர் மற்றும் மிக் 27 தாக்குதல் விமானங்கள், மற்றும் கடற்படையின் விசேட தாக்குதல் படகுகள் என்பன பயன்படுத்தப்படவுள்ளன

2016-ம் ஆண்டு வரப்போகும் சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிப்பது யார் கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்!

Sunday, August 30, 2015
சென்னை:2016-ம் ஆண்டு வரப்போகும் சட்டசபை தேர்தலில் யார், யாருடன் கூட்டணி என்ற முடிவு வெளியாகாத நிலையில், தற்போது கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் முதல்வராக தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு முதல் இடம் கிடைத்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு மூன்றாவது இடத்தில் உள்ளார்.

2016-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள், லயோலா கல்லூரி சார்பில் நடத்தப்பட்டு, இன்று முடிவுகள் வெளியாயின. இதில் மீண்டும் அ.தி.மு.க.வே வெற்றி பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

தகுதியானோருக்கு மட்டும் லைசன்ஸ் வழங்க வேண்டும்:நீதிபதி இளஞ்செழியன்!

Sunday, August 30, 2015
மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களைச் செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் திணைக்களங்கள் அதனைப் பெறுபவர்களின் தராதரத்தைப் பரிசீலனை செய்ய வேண்டும்.     அவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறவுள்ளவர்கள் அதனைப் பெறுவதற்கு ஏற்றதாகப் போக்குவரத்து விதிமுறை பற்றிய பூரண அறிவை பெற்றுள்ளாரா என்பதை அவதானித்து உறுதிப்படுத்திய பின்னரே அனுமதிப்பத்திரத்தை வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.
 
வீதி விபத்துக்களைத் தவிர்க்கும் நோக்குடன் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் பின்புறமாக அமைந்துள்ள யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நேற்றுப்பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.அதில் விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த அவரிடம் ஊடவியலாளர்கள் கருத்துக் கேட்டபோது நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் அவர் தெரிவிக்கையில், போக்குவரத்தில் பாதுகாப்புச் சம்பந்தமான நடவடிக்கைகளை அதிகரித்தால் விபத்துக்களைக் குறைக்க லாம்.நீதிமன்றங்களிலும் வேலைச்சுமை குறைவாக இருக்கும்.
 
நகரப்பகுதியில் குறைந்தது 40கிலோ மீற்றர் வேகத்துக்கு மேல் வாகனங்களையோ,மோட்டார் சைக்கிள்களையோ செலுத்தக்கூடாது.இவை தொடர்பில் நீதிமன்றங்களினால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
 
பாடசாலை மாணவர்கள் ,பாடசாலையில் ஒழுக்கமாக இருப்பது போன்று வீதிகளிலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

முகுல் - இளங்கோவன் - குஷ்பு: தமிழக காங்கிரசில் தனி கூட்டணி!

Sunday, August 30, 2015
சென்னை:இளங்கோவன் பேச்சால் எழுந்த திடீர் சர்ச்சைக்கு பின், தமிழக காங்கிரஸ் கட்சியில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிதம்பரம், திருநாவுக்கரசர், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்லக்குமார், வசந்தகுமார் என, எல்லா கோஷ்டி தலைவர்களும், ஒன்று சேர்ந்துள்ளனர்.
 
அபாயம்:இதில், சிதம்பரம் தவிர்த்து, மற்ற தலைவர்கள் எல்லாம், டில்லி சென்று, மேலிட தலைவர்கள் மோதிலால் ஓரா, அகமது படேல் ஆகியோரை சந்தித்து, இளங்கோவனுக்கு எதிராக, முறையிட்டுள்ளனர். 'இளங்கோவன் பேச்சால், தமிழக காங்கிரஸ் அறக்
 
கட்டளை கைவிட்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது' என, புகார் தெரிவித்து, திரும்பிஉள்ளனர்.
 
சவால்:சிதம்பரம், தன் பங்குக்கு டில்லி தலைவர்களிடம், இளங்கோவனை மாற்றும்படி கோரியுள்ளார். 'அவரது தலைமையில், தேர்தலை சந்திப்பது என்பது, கட்சிக்கு பெரிய
 
சவாலாக இருக்கும்' என்றும் எச்சரித்துள்ளார்.இந்த சூழலில், இளங்கோவனுக்கு ஆதரவு கொடி பிடிப்பவர், நடிகை குஷ்பு மட்டுமே. கட்சியின் மேலிட செய்தி தொடர்பாளராக இருக்கும், நடிகை குஷ்புவும், மேலிட பொறுப்பாளரும், கட்சியின் பொதுச் செயலருமான முகுல் வாஸ்னிக்கும்,
 
இளங்கோவனை தொடர்ந்து ஆதரிக்கின்றனர். இதனால், தமிழக காங்கிரசில், தனி கூட்டணி உருவாகி உள்ளதாக, கூறும்,
 
தமிழக காங்கிரசார், அதற்கு ஒரு உதாரணத்தையும் கூறினர்.
அ.தி.மு.க.,வினரின் எதிர்ப்புக்கு காரணமான இளங்கோவன், டில்லி சென்றார். காங்கிரஸ் சொத்து விவகாரம் தொடர்பாக, இளங்கோவனை அழைத்து, மேலிட பொறுப்பாளர் மோதிலால் ஓரா பேச விரும்பினார். உடனே, அதில் குஷ்புவும் கலந்து கொள்ள வேண்டும் என, முகுல் வாஸ்னிக் கண்டிப்பாக கூறி விட்டார்.
 
ஆலோசனை:அதையடுத்து, குஷ்பு அவசரமாக டில்லி வந்தார். முகுல் வாஸ்னிக், இளங்கோவன், குஷ்பு ஆகிய, மூவர் மட்டும் கலந்து கொண்ட கூட்டத்தை கூட்டி, ஓரா ஆலோசனை நடத்தி உள்ளார். இதனால், அதிருப்தி அடைந்த மற்ற கோஷ்டி தலைவர்கள் எல்லாம், இப்போது ஒன்று சேர்ந்துஉள்ளனர். அவர்களில், திருநாவுக்கரசர், தங்கபாலு, கிருஷ்ணசாமி,
 
செல்லக்குமார், வசந்தகுமார் உள்ளிட்டோர், டில்லி சென்று ஓரா, அகமது படேல் ஆகியோரை சந்தித்துள்ளனர்.'இளங்கோவன் பேச்சினாலும், 'டிரஸ்ட்' முறைகேடு கள் அம்பலத்துக்கு வந்துள்ளதாலும், தொடர்ந்து அறக்கட்டளையை தக்கவைப்பது கடினமாகி விட்டது' என, அவர்கள் புகார் தெரிவித்துஉள்ளனர்.- நமது

இந்தியா - இலங்கை இடையே மீண்டும்கப்பல் போக்குவரத்து சாத்தியமாகுமா?

Sunday, August 30, 2015
சென்னை:இலங்கையில், ரணில் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளதால், 'இந்தியா - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கும்' என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.தமிழகத்தின் ராமேஸ்வரம் - இலங்ைக தலைமன்னார் இடையே, பல ஆண்டுகளுக்கு முன்வரை, கப்பல் மூலம் வாணிபம் நடந்துள்ளது. இதனால், இருநாட்டு கலாசார பரிமாற்றம், உறவு சிறப்பாக இருந்தது.
 
துாத்துக்குடி - - கொழும்பு இடையே முதல் பயணிகள் கப்பலை இயக்கியவர் வ.உ.சிதம்பரனார். 1907-ம் ஆண்டு எம்.வீ. கலிலியோ, எம்.வி. லாவோ ஆகிய இரண்டு சுதேசி பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்கினார். 104 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தூத்துக்குடி - -கொழும்பு இடையே 2011-ம் ஆண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
 
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து 'ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற அதிநவீன சொகுசுப்பயணிகள் கப்பல் போக்குவரத்தை, அப்போதைய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன் துவக்கி வைத்தார். அந்த கப்பல் சேவை குறுகிய கால அவகாசத்தில் துவங்கப்பட்டதால், முதல் கப்பலில் பயணிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலே சென்றனர்.
 
நாளடைவில், கொழும்பு - துாத்துக்குடி பயணிகள் கப்பல் போக்குவரத்தில், லாபம் கிடைக்காததாலும், உள்நாட்டு போரினாலும் நிறுத்தப்பட்டது.
 
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததோடு, இரு நாடுகளுக்கு இடையே கப்பல் போக்குவரத்தை துவக்க, மோடி அரசு அதிக ஆர்வம் கொண்டுள்ளது. எனவே, இந்தியா - இலங்கை இடையே விரைவில், பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சமீபத்தில், இருநாட்டு வெளியுறவுத்துறை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர்கள், பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கையில் ரணில் தலைமையிலான அரசு புதிதாக அமைந்துள்ளதால், அண்டை நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்தும் வகையில், புதிய திட்டங்களுக்கு வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
 
தலைமன்னார் - ராமேஸ்வரம் இடையே கப்பல் போக்குவரத்தை அமைப்பதால், இந்தியா - இலங்கை உறவு வலுப்படுவதோடு, இலங்கையுடனான சீனாவின் நெருக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க ஏதுவாக இருக்கும்.-
DM

மங்களவிற்கு ஜனாதிபதி டோஸ் விட்டார்!! – அவருக்குத் தெரியாமல் பத்திரிகையாளர் மாநாடு நடத்தினாராம்!!

Sunday, August 30, 2015
அமெரிக்காவிற்கான தெற்காசிய உதவி செயலாளர் நிஷா பிஸ்வால், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். அதன்பின் ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது.
 
ஆனால் நாட்டின் ஜனாதிபதியை சந்திக்குமுன் ஊடக சந்திப்பை நடாத்தியது இராஜதந்திர முறைகளுக்கு முரணான செயல் என்பதை முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பாக மங்கள சமரவீரவிற்கு உத்தியோகப்பற்றற்ற முறையில் ஆட்சேபனையை தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

Saturday, August 29, 2015

இலங்கையின் புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி பதவியை கோருகிறது தமிழரசுக் கட்சி!!

Saturday, August 29, 2015
இலங்கையின் புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

இன்று அக் கட்சியால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, இரண்டாவதாக அதிக ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில் இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கவும் அமைச்சுப் பதவிகளை ஏற்று கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன அமைச்சரவையில் கூட்டாக பொறுப்புக்களை ஏற்கவுள்ளன.

இதனால், 16 ஆசனங்களுடன் அடுத்தபடியாக பாராளுமன்றத்தில் உள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கை தமிழரசுக் கட்சி) பாராளுமன்ற குழுத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கின் பல கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில், இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டது.

இதன்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் களமிறங்கிய கூட்டமைப்பு 14 ஆசனங்களை சுவீகரித்ததோடு மேலதிகமாக இரண்டு போனஸ் ஆசனங்களையும் பெற்று 16 ஆசனங்களுடன் இம்முறை பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பிரபாகரன் தற்கொலை செய்திருக்கலாம்: கருணா!!

Saturday, August 29, 2015
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது  புலிகளின் தலைவர் பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
 
 
வீடியோ பார்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்

இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேகச் செய்தியிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரில் பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அண்டனி உயிரிழந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பிரபாகரனின் மனைவி மதிவ
தனி, மகள் துவாரகா ஆகியோர் ஷெல் வீச்சில் உயிரிழந்துவிட்டதாக உறுதியான தகவல் உண்டு. இதனைத் தொடர்ந்து இளைய மகன் பாலச்சந்திரனுடன் பிரபாகரன் இடம்பெயரும் போது பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பிரபாகரன் தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.

வலது கை பழக்கம் உள்ள பிரபாகரன், இடப் பக்கத்தில் இருந்த கைத் துப்பாக்கியை வலது கையால் எடுத்து நெற்றிப் பொட்டின் மீது வைத்து சுட்டிருந்ததால்தான் அவரது தலை பிளவுபட்டுள்ளது. நிச்சயமாக இலங்கை இராணுவத்திடம் உயிரோடு பிடிபடும் சூழ்நிலையை பிரபாகரன் விரும்பமாட்டார். அவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை தமது ஆட்சிக் காலத்தில் இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உடனே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் போய்விட்டார்பூ எனவும் கருணா மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள சமலும் விருப்பம்!

Saturday, August 29, 2015
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தேசிய அரசாங்
கத்துடன் இணைந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.
 
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு இணங்கி தேசிய அரசாங்கத்தில் நானும் இணைந்து கொள்ளவுள்ளேன்.
 
அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதுவித தடையும் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக தேசிய அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்தை ஏற்றுக் கொள்வதோடு, அரசியல் என்பது கொள்கை ரீதியானதாக இருந்தாலும் கட்சித் தலைவரின் முடிவுக்கு மதிப்பளித்து செயற்படவுள்ளேன்.
 
தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் இன்னும் எதுவித முடிவுகளையும் எடுக்கவில்லை என்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார். அதே நேரம் ராஜபக்ச குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரப் போவதாகக் கூறியிருப்பது தொடர்பில் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த அவர்,
 
கட்சியில் தொடர்ந்தும் இருப்பதாயின் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு அமைய நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில் கட்சியைவிட்டு வெளியேற வேண்டும். இந்த இரண்டு தெரிவுகள் மட்டுமே எமக்கு முன்னால் உள்ளது’ என அவர் கூறினார்.

'Exercise - Cormorant Strike VI - 2015' begins on September 3!

Saturday, August 29, 2015
The three-week long joint military exercise involving thousands of Sri Lankan armed forces personnel and representatives from foreign countries will commence on Thursday (September3) for the sixth consecutive year, the Army said.
 
The joint field exercise, known as the 'Exercise - Cormorant Strike VI - 2015', is organized by the Sri Lankan Army (SLA) with the participation of overt 2500 tri-service personnel of the Army, Navy and Air Force.
 
The mock Field Training Exercise (FTX), focused on the employment of Special Operations Forces (SOF) in order to provide basis to launch ground operations will commence from Pulmoddai to north of Arugam Bay.
 
According to the Army, 2500 Infantry, Commando and Special Forces troops representing Sri Lanka Army, 245 Navy personnel, 140 Air Force personnel and 53 foreign participants and observers are expected to participate in this year's Exercise.
 
Military officers from Bangladesh, China, India, Indonesia, Malaysia, Nepal, Pakistan and USA have already confirmed their participation in the Exercise.
 
The Exercise with Army Commando (CR) Regiment and Special Forces (SF) Regiment troops, integrated with Navy and Air Force Special Forces, aims to enhance special operation capabilities and maintain combat readiness at all levels," Army Chief of Staff Major General Jagath Dias said at a press briefing held at Defence Media Center on Wednesday (27).
 
Covering a vast patch of island's jungle areas, coupled with simultaneous mock seaborne and airborne operations, the Exercise in its final stages expects to join with Army troops.
The Field Training Exercise, organized and implemented in close cooperation with the Navy and Air Force, has been designed for deployment of their troops in a war milieu of Special Operations at any given moment and planned for conduct of joint operations as one team, using manoeuvrist approach, encompassing planning, execution and command, the Army said.
 
It also focuses on planning, preparations, formulations, coordination, command, control, tactics, techniques and procedures (TTP), execution of Special Operations within given frameworks and is organized by the Directorate of Training at the Army Headquarters.

இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பா.உ.க்களை நீக்க முடியாது: எம்.எம்.மொஹமட்!

Saturday, August 29, 2015
இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றபோதும், பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களை நீக்க தேர்தல்கள் திணைக்களத்திற்கு முடியாது என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் தற்போது பூர்தியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் இணைக்கப்பட்டபின் அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

இரட்டை பிரஜாவுரிமை அல்லது வேறு காரணங்களின் நிமித்தம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நீதி விசாரணைகளின் பின் கிடைக்கப்பெறும் உத்தரவுக்கு அமைய, தேர்தல்கள் ஆணையாளர் திணைக்களத்தால் செயற்பட முடியும் எனவும் எம்.எம்.மொஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது சமர்ப்பிக்கப்படாது: விஜயதாச ராஜபக்ஸ!

Saturday, August 29, 2015
காணால் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது சமர்ப்பிக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வுகளின் போது காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.எனினும், அவ்வாறு அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படாது என நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உள்ளதாக ஏற்கனவே அமெரிக்கா உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.உள்ளக விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட்டதன் பின்னர், அதன் முன்னிலையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை சந்திக்க திகதி ஒன்றை ஒதுக்கித் தருமாறு கோரியுள்ளதாகவும், திகதி ஒதுக்கிக் கொடுக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால அறிக்கை தாயரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சஞ்சய் தத் வழக்கில் வந்தது திடீர் திருப்பம்!

Saturday, August 29, 2015
புதுடில்லி:'ஏ.கே., 56' துப்பாக்கியை வைத்திருந்த வழக்கில், நடிகர் சஞ்சய் தத்திற்கும், அவரின் நண்பர் யூசுப்புக்கும், பல ஆண்டுகளுக்கு முன்பே, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த குற்றத்திற்கு அதிகபட்சம், மூன்றாண்டுகள் தான் தண்டனை விதிக்க முடியும் என்பதை அறிந்து, நீதிபதிகள் நேற்று, அதிர்ச்சி அடைந்தனர்.

யூசுப் நுல்வாலா சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பி.சி.பந்த் ஆகியோரின் கவனத்திற்கு, வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த விவகாரத்தை கொண்டு வந்தார்.

இந்திய தண்டனைச் சட்டப்படி, ஏ.கே., 56 ரக துப்பாக்கியை சட்ட விரோதமாக வைத்திருப்பவர்களுக்கு, அதிக பட்சம் மூன்றாண்டுகள் தான் தண்டனை விதிக்க முடியும் என்பதை, முன்னரே தங்கள் கவனத்திற்கு கொண்டு வராதது குறித்து, நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். அதன் பிறகு, சிறையில் உள்ள நுல்வாலா, சீராய்வு மனு தாக்கல் செய்தால், அதை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சஞ்சய் தத்தும், யூசுப்பும், ஐந்தாண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன், சஞ்சய் தத், ஒரு மாத, 'பரோல்' எனப்படும் விடுமுறையில் வெளியே வந்துள்ளார்.

Friday, August 28, 2015

எதிர்வரும் முதலாம் திகதி இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு!

Friday, August 28, 2015
தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடத்த தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. 

அதன் தவிசாளர் மலிக் சமரவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நடைபெறவுள்ளது.

இதன் போது தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணை ஒன்றை பிரதமர் ரணில்விக்ரமசிங்க முன்வைக்கவுள்ளார்.

இதன் போது இது குறித்த ஒத்திவைக்கப்பட்ட விவாதம் ஒன்றை ஜே.வி.பி கோர எதிர்பார்த்திருப்பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இந்த விவாதத்துக்கு சந்தர்ப்பம் வழங்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அதேநேரம் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சம்பளமும், வரப்பிரசாதங்களும்!!

Friday, August 28, 2015
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரு உறுப்பினருக்குக் கிடைக்கப் பெறும் வரப்பிரசாதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி,
 
சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் – ரூ. 54525.00
 
போக்குவரத்துக் கொடுப்பனவு – ரூ. 10000.00
 
உணவு, குடிபானக் கொடுப்பனவு – ரூ. 1000.00
 
தொலைபேசிக் கட்டணம் – ரூ. 2000.00
 
பாராளுமன்றக் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்கான
கொடுப்பனவு -ரூ. 500.00
 
பாராளுமன்ற உறுப்பினர் ஒரு அமைச்சர் எனின்,
அவரின் அடிப்படைச் சம்பளம் – ரூ. 65000.00
 
பிரதி அமைச்சருக்கு அடிப்படைச் சம்பளம் – ரூ. 63500.00
 
மாதாந்தம் கொடுக்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு மாவட்டத்துக்கு மாவட்டம் வித்தியாசப்படும்.
இதன்படி,
 
கொழும்பு மாவட்டம் – ரூ. 18845.00
 
கம்பஹா மாவட்டம் – ரூ. 23000.00
 
கேகாலை, இரத்தினபுரி, காலி, கண்டி மற்றும் குருநாகல் – ரூ.28000.00
 
மாத்தளை, புத்தளம், மாத்தறை, நுவரெலியா – 32000.00
 
பொலன்னறுவை, பதுளை, ஹம்பாந்தோட்டை, வவுனியா, மொனராகலை, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி – ரூ. 37745.00
 
இது தவிர, சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிலையான தொலைபேசி அழைப்புக்கள் இரண்டு வழங்கப்படும். இதற்கான மாதாந்த கொடுப்பனவை பாராளுமன்றம் செலுத்தும்.
 
அத்துடன், உறுப்பினராக இருக்கும் காலத்தில் மாதிவெல கட்டிடத் தொகுதியில் ஒரு வீடு வழங்கப்படும். அல்லது வீட்டிற்கான கூலி வழங்கப்படும்.
 
மேலும், பாராளுமன்றத்தில் ஐந்து வருடம் முழுமையாக உறுப்பினராக இருக்கும் சகலருக்கும் ஓய்வுதியம் வழங்கப்படும்.

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் 16 இந்தியர்கள்!!

Friday, August 28, 2015
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இந்தியாவைச் சேர்ந்த, 16 பேர் இணைந்திருக்கக்கூடும் என்ற உளவுத்துறை தகவல், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முயன்று வருகின்றனர். 
 
அதற்காக, படித்த இளைஞர்களை தங்கள் அமைப்பில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில், அந்த அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நால்வர், ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்தனர். அவர்களில், ஆரீப் மஜித் என்பவரை மீட்ட மும்பை போலீசார், அவர் மீது, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்தனர்; மற்ற மூவரும், சிரியா மற்றும் ஈராக் போரில் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், நாடு முழுவதும் காணாமல் போன, 17 பேர் குறித்த தகவல் இதுவரை கிடைக்காத நிலையில், இவர்கள், ஐ.எஸ்., அமைப்பு அல்லது அதன் தலைமையில் இயங்கும், ஜப்ஹத் அல் - நுஸ்ராவில் இணைந்துள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.

பயங்கரவாத பயிற்சிக்காக, வெளிநாட்டுக்குச் சென்ற, 17 பேரும் இளம் வயதினர்; இவர்களுடன் சென்ற ஒரு பெண் வீடு திரும்பிவிட்டார். கடந்த நவம்பரில், இந்தியாவுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்படும் என, உளவு அமைப்புகள் எச்சரித்தன. இதை உறுதி செய்வது போல், ஜம்மு - காஷ்மீர், கர்நாடகா, தமிழகம், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கொடி பறக்கவிடப்பட்டதை உளவுத்துறை சுட்டிக்காட்டியது.
 
 இதையடுத்து, இந்த மாத துவக்கத்தில், உள்துறை அமைச்சகத்தில் நடந்த, 12 மாநிலங்களின், டி.ஜி.பி.,க்கள் மற்றும் உள்துறைச் செயலர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காணாமல் போன, 16 இந்திய இளைஞர்கள், ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்தது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இந்திய இளைஞர்கள், பயங்கரவாத அமைப்பில் சேருவதைத் தடுக்க, அனைத்து மாநிலங்களும் உஷாராக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

Thursday, August 27, 2015

அமெரிக்காவின் நடவடிக்கை மிகவும் ஆபத்தானது: குணதாச அமரசேகர!

Thursday, August 27, 2015
அமெரிக்காவின் நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
 
அவர், இலங்கையில் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றை தயாரிக்க உள்ளார். அமெரிக்காவின் தேவைக்கு அமையவே இவ்வாறு அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
 
இந்த தேசிய அரசாங்கம் எவ்வளவு செல்லுபடியாகும் என்ற கேள்வி எமக்குள் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளன.
 
எனினும் மக்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ வாக்களிக்கவில்லை. ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குமே மக்கள் வாக்களித்திருந்தனர். எனவே, உண்மையில் ஒப்பந்தத்தில் இந்த இரண்டு தரப்பினருமே கையொப்பமிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.         

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிரான பயணத் தடை நீக்கம்!

Thursday, August 27, 2015
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிரான பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. கோதபாய ராஜபக்ஸ,வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அவனட் க்ரேட் பாதுகாப்பு நிறுவனம் தொடர்பிலான சர்ச்சையைத் தொடர்ந்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மிதக்கும் ஆயுதக் கப்பல் களஞ்சியம் தொடர்பிலான சர்ச்சையை தொடர்ந்து வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள கோதபாயவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை இன்றைய தினம் காலி நீதவான் நீக்கியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்!

Thursday, August 27, 2015
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் அமர்வுகளுக்கு முன்னதாக அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ம் திகதிக்கு முன்னதாக அவர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை குறித்த அறிக்கை அல் ஹூசெய்ன் சமர்ப்பிக்க உள்ளார். யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், சில முக்கிய பரிந்துரைகள்

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில்!

Thursday, August 27, 2015
சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஒன்று கூடவுள்ளது. 

ஜனாதிபதி உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவருமான முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்துக்கான முன்னெடுப்புகள் தொடர்பில் இதன் போது பேசப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார, சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றையதினம் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கு முன்னர் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக மாத்திரமே செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் முன் எடுக்கப்படுகின்றது: தினேஷ் குணவர்த்தன!

Thursday, August 27, 2015
இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் முன் எடுக்கப்படுவதாக கூட்டமைப்பின் பங்காளி கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

அது தொடர்பில் பிரச்சினையேதும் இல்லை என குறிப்பிட்ட மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன, அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அமைச்சரவை ஸ்தாபிக்கப்படாமையினால் நாட்டிற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
 
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பெரும்பாலும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்த கருத்து தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து தற்போது எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு பற்றி இரு தரப்பினரும் கருத்து வௌியிட வேண்டும் ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே கருத்து வௌியிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
        

தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு இணக்கப்பாடு: மலிக் சமரவிக்ரம!

Thursday, August 27, 2015
தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அதன் தவிசாளர் மலிக் சமரவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இடம்பெற்ற ஆழமான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தேசிய அரசாங்கத்தின் கீழான அமைச்சரவை எதிர்வரும் 2ம் திகதியே பதவி ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் முழுவதையும் அரசாங்கமாக மாற்றுவதற்கான திட்டம் குறித்து ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தி வந்தது.

இதற்காக இரண்டு வருடங்களுக்கேனும் தேசிய அரசாங்கத்தை உருவாக்க கோரியிருந்த நிலையில், இது தொடர்பில் இடம்பெற்ற சுமூகமானதும், ஆழமானதுமான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோனியாவுக்கு எதிரான 1984 சீக்கிய கலவரவழக்கு அமெரிக்க கோர்ட் தள்ளுபடி!

Thursday, August 27, 2015
நியூயார்க்: 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் காங். தலைவர் சோனியாவுக்கு தொடர்பிருப்பதாக கூறி அமெரிக்கா கோர்ட்டில் சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
 
மனித உரிமை மீறல் நடந்ததாக சோனியா மீது நடந்த வழக்கில் கடந்த 2014-ம்ஆ ண்டு ஜுன்மாதம் கீழ் கோர்ட் வழக்கை தள்ளுபடிசெய்தது. இதனை எதிர்த்து நியூயார்க் கோர்ட்டில் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு அப்பீல் செய்தது. இந்த வழக்கை இன்று (ஆக.26) நீதிபதிகள் ஜோஸ் கேர்பரேன்ஸ், ரென்னா ராகி மற்றும் ரிச்சர்ட் ஆகியோர் கொண்ட பெஞ்ச விசாரித்தது. கீழ் கோர்ட் உத்தரவை உறுதி செய்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Wednesday, August 26, 2015

அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணைகள் துரிதம்!

Wednesday, August 26, 2015
அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணைகள் துரிதமாக நடைபெறவுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு எல்லாளன் படை நடவடிக்கை மூலம் அநுராதபுரம் விமானப்படைத் தளத்தை விடுதலைப் புலிகள் தகர்த்தெறிந்திருந்தனர்.
 
இத்தாக்குதலின் போது 16 விமானப்படை விமானங்களும், 14 இராணுவத்தினரும் அழிக்கப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிசார், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து வழக்குத் தொடுத்துள்ளனர்.
இதற்கென அநுராதபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட உயர்நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இந்த வழக்கை துரிதமாக விசாரித்து முடிக்கும் நோக்கில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் வழக்கு தினமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதற்கான உத்தரவை விசேட உயர்நீதிமன்ற நீதிபதி கேமா ஸ்வர்ணாதிபதி பிறப்பித்துள்ளார்.

புதிய அரசின் அமைச்சரவையில் ஐந்து தமிழர்கள்: அதில் நான்கு மலையகத்துக்கு?

Wednesday, August 26, 2015
புதிய அரசாங்கத்தில் அமைச்சுக்களை பொறுப்பேற்கவுள்ள அமச்சர்களின் விபரம் இங்கு தரப்பட்டுள்ளது எனினும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
  
இந்த பட்டியலின்படி ஐந்து தமிழர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கபடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதில் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் என 78 பேர்களின் பெயர்கள் அடங்கியுள்ளன.
ரணில் விக்ரமசிங்க
ரவி கருணாநாயக்க
சஜித் பிரேமதாஸ
தயா கமகே
அகில விராஜ் காரயவசம்
லக்ஷ்மன் கிரிஎல்ல
ரவுப் ஹக்கிம்
சுஜுவ சேனசிங்க
ஹர்ஷ டி சில்வா
பாட்டலி சம்பிக்க ரணவக்க
விஜேதாஸ ராஜபக்ச
ருவண் விஜேவர்தன
ரஞ்சன் ராமநாயக்க
அஜித் பீ பெரேரா
அர்ஜுன ரணதுங்க
ஜோன் அமரதுங்க
மொஹமட் ஹலீம்
வசந்த சேனாநாயக்க
ரஞ்சித் மத்துமபண்டார
ஹரின் பெர்ணான்டோ
வசந்த அலுவிஹார
இரான் விக்ரமரத்ன
திலிப் வெதஆராச்சி
மொஹமட் மாஹாரூப்
பாலித்த தெவரபெரும
பாலித்த ரங்க பண்டார
ரவி சமரவீர
வடிவேல் சுரேஷ்
புத்திக்க பத்திரன
மங்கள சமரவீர
சாகல ரத்ணாநாயக்க
கயந்த கருணாதிலக்க
வஜிர அபேவர்தன
பீ.ஹெரிசன்
சந்திரானி பண்டார
நிரோஷன் பெரேரா
பீ.திகாம்பரம்
ராதா கிருஷ்ணன்
நவீன் திஸாநாயக்க
தொண்டமாண்
ஜயவிக்ரம பெரேரா
எஸ்.பீ.நாவின்ன
அஷோக் அபேசிங்க
அமீர் அலி
கபீர் ஹஷீம்
சம்பிக்க பிரேமதாஸ
ரிஷாட் பதியூதீன்
தலதா அத்துகோரல
துனேஷ் கன்கந்த
அனோமா கமகே
மலிக் சமரவிக்ரம
ஜயம்பதி விக்ரமரத்ன
திலக் மாரபன
டீ.எம்.சுவாமிநாதன்
அத்துரலிய ரத்ன தேரர்
எம்.கே.டி.எஸ்.குணவர்தன
மொஹமட் நவாவி
துமிந்த திஸாநாயக்க
மொஹான் லால்
விதுர விக்ரமநாயக்க
சரத் அமுனுகம
கெஹலிய ரம்புக்வெல்ல
சிறிபால கம்லத்
மஹிந்த அமரவீர
தேனுக்க விதானகமகே
சந்திரசிறி கஜதீர
சந்திம வீரக்கொடி
பிரியங்கர ஜயரத்ன
தயாசிறி ஜயசேகர
ரஞ்சித சியம்பலாப்பிட்டிய
டிலான் பெரேரா
ஏ.ஏ.எம்.பவுசி
விஜயமுனி சொய்சா
மஹிந்த சமரசிங்க
லக்ஷ்மன் யாப்பா
பைஸர் முஸ்தப்பா
எம்.ஹிஸ்புல்லா
எஸ்.பீ.திஸாநாயக்க
திலங்க சுமத்திபால

Tuesday, August 25, 2015

தேசிய பட்டியலால் தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்புக்குள் வலுவடையும் முரண்பாடு!!

Tuesday, August 25, 2015
தமிழ்த்தேசிய (புலி)கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்தமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல எனவும் அது தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட முடிவு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் தோல்வியடைந்ததையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சித் தலைவரன அவருக்கு தேசிய பட்டியலில் இடமளிக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் மற்ற கட்சித்தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
 
எனினும் அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு இலங்கை தமிழரசுக்கட்சி தமது விருப்பத்திற்கு அமைவாக இரண்டு பேரை தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக நியமித்துள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
அத்துடன் தம்மை தேசிய பட்டியலில் நியமிக்குமாறு முன்வைத்து இரு முக்கிய பேச்சுவார்ததைகள் இடம்பெற்ற போதிலும், பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக முடிவு மேற்கொள்ளபடவில்லையென அவர் தெரிவித்தார்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான தேசியப் பட்டியலுக்கு இலங்கை தமிழரசு கட்சியில் இருக்கும் சில நபர்கள் தமது கட்சியின் இரண்டு உறுப்பினர்களை நியமித்திருப்பது,
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசு கட்சி தவிர்த்த ஏனைய கட்சிகளுக்கு ஏற்புடைய செயலல்ல என தெரிவித்த அவர்,
எல்லோரும் சேர்ந்து விதை விதைப்பதும், அறுவடை செய்யும்போது இலங்கை தமிழரசு கட்சி மாத்திரம் அதன் பயனை அடைவது ஆரோக்கியமான அரசியலுக்கும் நல்லதல்ல்.
எனினும் இவ்வாறான செயற்பாடுகளை இலங்கை தமிழரசு கட்சி தொடர்ந்து செய்கிறது என குறிப்பிட்டார்.
 
குறித்த பிரச்சனை தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சிலதினங்களில் விரிவானதொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் நியமனங்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களையும் சர்ச்சைகளையும் அதன் தலைவர் இரா.சம்பந்தர் மறுத்துள்ளார்.
 

மிகவும் ஆழமாக சிந்தித்து கலந்துரையாடிய பின்னரே கூட்டமைப்பின் சார்பில் துரைரட்ணசிங்கம் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோருக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
 
சில கொள்கைகளின் அடிப்படையிலேயே அந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு ஒவ்வொரு இடங்கள் வழங்குவது என்றும் கூட்டமைப்பின் சார்பில் பெண் ஒருவர் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் எனவும் தீர்மானித்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
 
குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே சாந்தி சிறீஸ்கந்தராஜா தோல்வியடைந்திருந்தார்.
யாழ் தேர்தல் மாவட்டத்தை விட வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்த அளவுக்கே கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.
 
இதனால் அவர் நியமிக்கப்பட்டதாகவும், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களில் மிகக் குறைவான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதால் அப்பகுதிக்கு ஒரு இடம் வழங்கும் என முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இந்நிலையில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஏற்கனவே ஐந்து உறுப்பினர்கள் தேர்வாகியுள்ள நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆறாவது இடத்தை தவற விட்டவரை புறந்தள்ளி, அவருக்கும் குறைவான வாக்குகள் பெற்று சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு இடமளிப்பது தவறானது எனவும் தேசியப் பட்டியல் நியமனங்கள் குறித்து கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவை விமர்சித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்தார்.

மாலைதீவு ஜனாதிபதிக்கு மீண்டும் சிறை!

Tuesday, August 25, 2015
2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மாலைதீவு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர், முகமது நஷீத். இவர், தனது பதவி காலத்தில் நீதிபதி ஒருவரை கைது செய்ததாக கூறி தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் அவர் மீது கிரிமினல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 19 நாட்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு நஷீத்துக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு மாதத்துக்கு நஷீத்தை, வீட்டுக் காவலில் வைத்து சிகிச்சை அளிக்க கோர்ட் அனுமதித்தது. இந்த காலக்கெடு நேற்று  முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அவருடைய வீட்டுக்காவலை நீக்கிய பொலிசார் அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.
 
நஷீத்தை மீண்டும் சிறையில் அடைத்ததற்கு அவருடைய மாலைதீவு ஜனநாயக கட்சி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. கோர்ட் உத்தரவு இல்லாமல் நஷீத் வீட்டின் முன்கேட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது மிளகு ஸ்பிரேயை தெளித்து அவரை பொலிசார் இழுத்துச் சென்றுள்ளனர். இது கொடூரமான செயல், சட்டவிரோதமானது ஆகும் என்று அக்கட்சி கண்டித்து உள்ளது.

அனுராதபுரம் விமானப்படை முகாம் தாக்குதல்: புலி அமைப்பின் உறுப்பினர்கள் இருவரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியல்!

Tuesday, August 25, 2015
2007ம் ஆண்டு அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை செப்டம்பர் மாதம் 4ம் திகதி முதல் தொடர்ந்து முன்னெடுக்க அனுராதபுர விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சம்பவம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அனுராதபுர விஷேட மேல் நீதிமன்ற நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக  செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் புலி அமைப்பின் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் இருவரை எதிர்வரும் 4ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் 16 விமானங்கள் சேதமடைந்ததோடு, பாதுகாப்புப் பிரிவின் 14 பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Monday, August 24, 2015

கோட்டாபய விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பாரியளவிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவிற்கு குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு விடுத்திருந்த அழைப்பிற்கு அமைய அவர், இன்று விசாரணைகளுக்காக ஆஜராகியுள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான அறிக்கையை பெற்றுக் கொள்ளும் நிமித்தம் இன்று காலை 9.30 மணியளவில் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா தெரிவித்துள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணையுடன் தொடர்புடைய ஏனைய அனைத்து தரப்பினரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாரியளவிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுரேஸிற்கு அல்வா! சம்பந்தனின் அல்லக்கைக்கு போனஸ்! தேசியப்பட்டியல் விபரம் வெளியிடப்பட்டது: துரைரெட்ணம் மற்றும் சாந்தி நியமனம்!!

Monday, August 24, 2015
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனங்களுக்கு சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா மற்றும் கதிர்காமதம்பி துரைரட்ணசிங்கம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரினதும் பெயர்கள் இன்று தேர்தல்கள் அலுவலகத்திற்கு கிடைத்ததாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜாவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கதிர்காமதம்பி துரைரட்ணசிங்கம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதா்கவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்..

கடந்த தேர்தலில் 14 ஆசனங்களை வென்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 2 மேலதிக ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.

இதற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக கடந்த மூன்று தினங்களாக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

சுரேஷ்பிரேமசந்திரனுக்கும், வினோநோகராத லிங்கத்துக்கும் உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று அதிகளவில் வலியுறுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இந்த பட்டிய்ல தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.