Saturday, August 29, 2015
காணால் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி
விசாரணைக்குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின்
போது சமர்ப்பிக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் மாதம் ஐக்கிய
நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வுகளின் போது காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.எனினும், அவ்வாறு அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படாது என நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உள்ளதாக ஏற்கனவே அமெரிக்கா உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.உள்ளக விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட்டதன் பின்னர், அதன் முன்னிலையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை சந்திக்க திகதி ஒன்றை ஒதுக்கித் தருமாறு கோரியுள்ளதாகவும், திகதி ஒதுக்கிக் கொடுக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால அறிக்கை தாயரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment